விமர்சித்ததற்காக ஜாம்பவான் என்று பார்க்காமல் ஸ்ஷ் சொன்ன ஷாஹீன் அப்ரிடி.. பதிலடி கொடுத்த வாசிம் அக்ரம்

Wasim Akram 2
- Advertisement -

பாகிஸ்தானில் பிஎஸ்எல் டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிராக கடந்த மார்ச் 9ஆம் தேதி நடந்த போட்டியில் லாகூர் அணியின் கேப்டன் ஷாகின் அப்ரிடி பேட்டிங்கில் தமக்குத் தாமே ப்ரமோஷன் கொடுத்து 5வது இடத்தில் களமிறங்கினார். ஆனால் அந்த இடத்தில் வெறும் 1 (3) ரன் மட்டுமே எடுத்த அவர் தம்முடைய அணிக்கு பின்னடைவையே ஏற்படுத்தினார்.

அப்போ டேவிட் வீஸ், சிக்கந்தர் ராசா போன்றவர்கள் 5வது பேட்டிங் செய்வதற்கு காத்திருப்பதால் ஷாஹீன் அப்ரிடி ஆல் ரவுண்டர் கிடையாது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று வாசிம் அக்ரம் அறிவுரை வழங்கினார். இது பற்றி ஏ டிவி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இன்னும் நீங்கள் ஆல் ரவுண்டராக உருவாகவில்லை என்று ஷாஹீன் அப்ரிடியிடம் சொல்ல வேண்டும்”

- Advertisement -

திமிரான அப்ரிடி:
“உங்களுடைய அணியில் உலகத்தரம் வாய்ந்த அதிரடி வீரர்கள் இருக்கின்றனர். குறிப்பாக வீஸ் – ராசா போன்றவர்கள் கடைசி 3 ஓவர்களில் ரன்கள் குவிக்கும் வேலையை செய்வதற்காக உங்களுடைய அணியில் இருக்கின்றனர். இப்போட்டியில் சாகின் அப்ரிடி 3 பந்தில் 1 ரன் எடுத்தார். ஆனால் வீஸ் 9 பந்துகளில் 24, ராசா 16 பந்துகளில் 22 ரன்கள் அடித்தனர். எனவே நீங்கள் கேப்டனாக இருக்கிறீர்கள் என்பதற்காக கண்டிப்பாக பேட்டிங் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது”

“சூழ்நிலையை உணர்ந்து அதற்குத் தகுந்த அதிரடி வீரர்களை களத்திற்கு அனுப்புங்கள். ஒருவேளை அதை ஷாஹீன் செய்திருந்தால் அவருடைய அணி 177 ரன்களுக்கு பதிலாக 190 ரன்கள் அடித்திருக்கலாம்” என்று கூறினார். அந்த நிலையில் அடுத்த ஒரு நாளுக்குப் பின் நடந்த கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வாசிம் அக்ரம் அறிவுரையை ஏற்காத சாகிப் அப்ரிடி 5வது இடத்தில் வந்து 55 (34) ரன்கள் விளாசினார். இருப்பினும் அந்தப் போட்டியிலும் லாகூர் தோற்றது வேறு கதை.

- Advertisement -

ஆனால் அரை சதமடித்த போது தம்மை விமர்சித்து அறிவுரை வழங்கிய வாசிம் அக்ரமுக்கு வாய் மீது கை வைத்து அமைதியாக இருங்கள் என்பதற்கு அடையாளமாக “ஷ்” என்ற வகையில் சைகை செய்து ஷாஹீன் அப்ரிடி கொண்டாடினார். இறுதியில் 10 போட்டிகளில் 8 தோல்விகளை சந்தித்து லாகூர் தொடரிலிருந்து வெளியேறியது. அப்போது ஷாஹீன் அப்ரிடிக்கு பதிலடியுடன் வாசிம் அக்ரம் கொடுத்த ஆலோசனை பின்வருமாறு.

இதையும் படிங்க: சேப்பாக்கத்தில் மேட்ச் பாக்கணுமா? ரசிகர்களுக்காக டிக்கெட் விற்பனை குறித்த முக்கிய அறிவிப்பு – விவரம் இதோ

“5 வருடம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய மிகவும் அனுபவமிக்க பவுலரான அவர் தற்போது பாகிஸ்தான் கேப்டனாக இருக்கிறார். இப்போதெல்லாம் அவருடைய முதல் 2 பந்துகள் யார்க்கராக இருக்கும் என்பதை அனைத்து பேட்ஸ்மேன்களும் புரிந்து கொண்டு தயாராக இருக்கின்றனர். அவரால் டெத் ஓவரில் சிறப்பாக பந்து வீச முடியவில்லை. எனவே அவர் பந்து வீச்சில் முன்னேற்றம் காண வேண்டும்” என்று கூறினார்

Advertisement