கிங் கோலியை முந்திய பாபர் அசாம்.. கிறிஸ் கெயில் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை

Babar Azam
- Advertisement -

ஐபிஎல் தொடருக்கு போட்டியாக பாகிஸ்தான் வாரியம் பிஎஸ்எல் எனும் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. அதனுடைய 2024 சீசன் தற்போது பாகிஸ்தானில் துவங்கி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதில் பிப்ரவரி 21ஆம் தேதி கடாபியில் நடைபெற்ற 6வது லீக் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பெசாவர் ஜால்மி மற்றும் ஷான் மசூட் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணிகள் மோதின.

அப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பெஷாவர் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19.5 ஓவரில் 154 ரன்களுக்கு அவுட்டானது. அந்த அணிக்கு சாய்ம் ஆயுப் 0, முகமத் ஹரிஷ் 6, கேட்மோர் 2 ரன்களில் அவுட்டானார்கள். இருப்பினும் மறுபுறம் மற்றொரு துவக்க வீரர்கள் மற்றும் கேப்டன் பாபர் அசாம் நங்கூரமாக விளையாடி 7 பவுண்டரி 1 சிக்சருடன் அரை சதமடித்து 72 (51) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பாபர் அசாம் சாதனை:
அவருடன் ரோவ்மன் போவல் 39 (25), ஆசிப் அலி 23 (16) ரன்கள் எடுக்க கராச்சி சார்பில் அதிகபட்சமாக மிர் ஹம்சா மற்றும் ஹஸன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதை விட இந்த போட்டியில் எடுத்த 72 ரன்களையும் சேர்த்து ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 10000 ரன்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் ஆல் டைம் சாதனையை உடைத்துள்ள பாபர் அசாம் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 109 போட்டிகளில் விளையாடி 3698 ரன்கள் குவித்துள்ள பாபர் அசாம் பிஎஸ்எல், பாகிஸ்தான் நேஷனல் கோப்பை போன்ற எஞ்சிய டி20 தொடர்களையும் சேர்த்து 271 இன்னிங்ஸில் 10000* ரன்கள் அடித்துள்ளார். அதனால் அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர், விராட் கோலி, கிறிஸ் கெயில் போன்ற ஜாம்பவான்களை முந்தியுள்ள அவர் இந்த புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. பாபர் அசாம் : 271*
2. கிறிஸ் கெயில் : 285
3. விராட் கோலி : 299
4. டேவிட் வார்னர் : 303

- Advertisement -

அந்த வகையில் உலக சாதனை படைத்துள்ளதால் மீண்டும் விராட் கோலியை விட பாபர் அசாம் தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். ஆனால் அதைத் தொடர்ந்து 155 ரன்களை துரத்திய கராச்சி அசால்டாக 16.5 ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதையும் படிங்க: 2 கி.மீ கூட ஓடமுடியல.. பாகிஸ்தான் அணியை ஒன்னுமில்லாம பண்ணிடீங்க.. பாபர் அசாம், ஆர்த்தரை விளாசிய ஹபீஸ்

அந்த அணிக்கு கேப்டன் ஷான் மசூட் 12, அக்லக் 24, சோயப் மாலிக் 29 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் ஜேம்ஸ் வின்ஸ் 38* (30) கைரன் பொல்லார்ட் ஒரே ஓவரில் சரவெடியாக 27 ரன்கள் குவித்தது உட்பட 49* (21) ரன்களும் அடித்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் பெஷாவர் சார்பில் அதிகபட்சமாக லுக் வுட் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

Advertisement