2 கி.மீ கூட ஓடமுடியல.. பாகிஸ்தான் அணியை ஒன்னுமில்லாம பண்ணிடீங்க.. பாபர் அசாம், ஆர்த்தரை விளாசிய ஹபீஸ்

Mohammad Hafeez
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் 1992 உலக சாம்பியனாக சாதனை படைத்த பாகிஸ்தான் சமீப காலங்களாகவே தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பாபர் அசாம் தலைமையில் கடந்த 2022ஆம் ஆண்டு வரலாற்றிலேயே முதல் முறையாக தங்களுடைய சொந்த மண்ணில் கூட பாகிஸ்தான் ஒரு டெஸ்ட் போட்டியில் வெல்ல முடியாமல் மெகா வீழ்ச்சியை சந்தித்தது.

அதைத் தொடர்ந்து 2023 ஆசிய கோப்பையில் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் வெளியேறிய பாகிஸ்தான் 2023 உலகக் கோப்பையிலும் இந்தியா, ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை சந்தித்து செமி ஃபைனலை கூட தொட முடியாமல் நாட்டுக்கு கிளம்பியது. இந்த அடுத்தடுத்த தோல்விகளுக்கு பொறுப்பேற்ற பாபர் அசாம் தம்முடைய அனைத்து விதமான கேப்டன்ஷிப் பதவிகளையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

- Advertisement -

கெடுத்த பாபர்:
அதைத் தொடர்ந்து இயக்குனர் மிக்கி ஆர்தரையும் கழற்றி விட்ட பாகிஸ்தான் வாரியம் ஷான் மசூட், ஷாஹீன் அப்ரிடியை டெஸ்ட் மற்றும் டி20 கேப்டனாக நியமித்தது. மேலும் முகமது ஹபீஸ் அணியின் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர்களது தலைமையிலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3 – 0 (3) என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் நியூசிலாந்து மண்ணில் நடந்த டி20 தொடரில் 4 – 1 (5) என்ற கணக்கில் மண்ணை கவ்வியது.

அதனால் தற்போது முகமது ஹபீஸையும் பாகிஸ்தான் அணியின் இயக்குனர் பதிவிலிருந்து அந்நாட்டு வாரியம் கழற்றி வைத்துள்ளது. இந்நிலையில் 6 மாதத்துக்கு முன் பாபர் அசாம் – மிக்கி ஆர்த்தர் ஆகியோர் ஃபிட்னஸ் சோதனையே வேண்டாம் என்று நிறுத்தி பாகிஸ்தான் அணியை மொத்தமாக கெடுத்து வைத்துள்ளதாக முகமது ஹபீஸ் அதிரடியான பின்னணியை பகிர்ந்துள்ளார். அதனாலேயே தற்போதைய பாகிஸ்தான் வீரர்கள் 2 கி.மீ ஓட முடியாத அளவுக்கு திணறுவதாக தெரிவிக்கும் அவர இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஆஸ்திரேலியாவுக்கு சென்ற போது ஃபிட்னஸை பார்த்துக் கொள்ளுமாறு எங்களுடைய வீரர்களிடம் சொன்னேன். மேலும் ஃபிட்னஸ் அளவைப் பற்றி பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்களிடம் கேட்டறிந்தேன். அப்போது கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே பாபர் அசாம் மற்றும் மிக்கி ஆர்தர் ஆகியோர் பாகிஸ்தான் வீரர்களின் ஃபிட்னெஸ் அளவை சோதிப்பதை நிறுத்துமாறு சொன்னதாக பயிற்சியாளர்கள் என்னிடம் தெரிவித்தனர்”

இதையும் படிங்க: 310 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்த டிம் டேவிட்.. கடைசி பந்தில் நியூசிலாந்தின் வெற்றியை ஆஸி பறித்தது எப்படி?

“மேலும் வீரர்களை அவருடைய விருப்பத்திற்கேற்ப பாபர் அசாம் விளையாடச் சொன்னதாகவும் அவர்கள் கூறினார்கள். அதன் காரணமாக வீரர்களின் கொழுப்பு நிலையை சோதிக்கும் போது அது அதிகமாக இருந்தது. அந்த வகையில் ஃபிட்டாக இல்லாமல் இருந்த பாகிஸ்தான் வீரர்களால் 2 கிலோ மீட்டர் கூட ஓட முடியவில்லை. எனவே ஃபிட்னெஸ் தேவையில்லை என்று கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட முடிவே தற்போது பெரிய தோல்விகளை கொடுக்கிறது” என்று கூறினார்.

Advertisement