310 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்த டிம் டேவிட்.. கடைசி பந்தில் நியூசிலாந்தின் வெற்றியை ஆஸி பறித்தது எப்படி?

NZ vs AUS 11
- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கில் நடைபெறும் இத்தொடர் பிப்ரவரி 21ஆம் தேதி வெலிங்டன் நகரில் துவங்கியது. இந்திய நேரப்படி முற்பகல் 11.30 மணிக்கு துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 215/3 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு ஃபின் ஆலன் 32 (17), டேவோன் கான்வே 63 (46), ரச்சின் ரவீந்தரா 68 (35), கிளன் பிலிப்ஸ் 19* (10), மார்க் சேபமேன் 18* (13) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் அதிரடியாக நல்ல ரன்களை குவித்த நிலையில் ஆஸ்திரேலிய சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க், மிட்சேல் மார்ஷ், பட் கமின்ஸ் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

- Advertisement -

த்ரில் வெற்றி:
அதைத் தொடர்ந்து 216 என்ற கடிதமான இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாட முயற்சித்து 24 (15) ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களில் டேவிட் வார்னரும் 32 (20) ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மூன்றாவது இடத்தில் களமிறங்கிய கேப்டன் மிட்சேல் மார்ஷ் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

ஆனால் அவருக்கு எதிர்ப்புறம் கைகொடுக்க முயற்சித்த கிளன் மேக்ஸ்வெல் 25 (11), ஜோஸ் இங்லிஷ் 20 (20) ரன்களில் அவுட்டானதால் ஆஸ்திரேலியா பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மார்ஷ் அரை சதமடித்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு போராடினார். ஆனாலும் எதிர்புறம் யாரும் அடிக்காததால் ரன்ரேட் எகிறிய ஆஸ்திரேலியாவுக்கு கடைசி 2 ஓவரில் 35 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

அப்போது புதிதாக உள்ளே வந்த டிம் டேவிட் 19வது ஓவரில் ஆடம் மில்னேவுக்கு எதிராக கடைசி 3 பந்துகளில் 4, 6, 6 ரன்களை விளாசி போட்டியில் திருப்பு முனையை உண்டாக்கினார். அதனால் டிம் சௌதீ வீசிய கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் 3 பந்துகளில் ஆஸ்திரேலியா ஒய்ட் உட்பட 4 ரன்கள் எடுத்தது. ஆனால் 4வது பந்தில் சிக்ஸர் விளாசிய டிம் டேவிட் 5வது பந்தில் டபுள் ரன் எடுத்து கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது பவுண்டரி விளாசி ஃபினிஷிங் கொடுத்தார்.

இதையும் படிங்க: பஸ்பால் நல்லாருக்கு.. ஆனா எங்ககிட்ட வேலையாகாது.. இந்தியா தான் ஜெயிக்கும்.. கங்குலி ஓப்பன்டாக்

அதனால் 20 ஓவரில் 216/4 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் 6 விக்கெட் விதிதியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 1 – 0* என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அந்த அணிக்கு டிம் டேவிட் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 31* (10) ரன்களை 310 ஸ்ட்ரைக் ரேட்டிலும் மார்ஷ் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 72* (44) ரன்களும் விளாசி வெற்றி பெற வைத்தனர். மறுபுறம் டெத் ஓவர்களில் மோசமாக செயல்பட்டு வெற்றியை தாரை வார்த்த நியூசிலாந்துக்கு கேப்டன் மிட்சேல் சான்ட்னர் 2 விக்கெட்கள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

Advertisement