பஸ்பால் நல்லாருக்கு.. ஆனா எங்ககிட்ட வேலையாகாது.. இந்தியா தான் ஜெயிக்கும்.. கங்குலி ஓப்பன்டாக்

Sourav Ganguly 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதில் டி20 போல அதிரடியாக பேட்டிங் செய்து இந்தியாவை தோற்கடிப்போம் என்று தொடர் துவங்குவதற்கு முன்பாகவே எச்சரித்த இங்கிலாந்து முதல் போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

இருப்பினும் அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்ற இந்திய அணி இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்து சொந்த மண்ணில் நாங்கள் அவ்வளவு சுலபமாக வீழ்ந்து விட மாட்டோம் என்பதை காண்பித்துள்ளது. மறுபுறம் மூன்றாவது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இங்கிலாந்து 1934க்குப்பின் தங்களுடைய மிகப்பெரிய தோல்வியை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது.

- Advertisement -

பஸ்பால் நல்லாருக்கு:
அந்த தோல்விக்கு சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடாமல் அதிரடியாக விளையாட முயற்சித்த இங்கிலாந்து அணியின் பஸ்பால் அணுகுமுறை முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால் இப்போதும் தங்களால் அடுத்த 2 போட்டிகளில் வென்று கம்பேக் கொடுத்து இத்தொடரை வெல்ல முடியும் என்று பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் உறுதியாக தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாட முயற்சிக்கும் இங்கிலாந்தின் பஸ்பால் அணுகுமுறை நன்றாக இருப்பதாக முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலி பாராட்டியுள்ளார். ஆனால் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலேயே வெற்றி கண்ட இந்திய அணி கடைசி 2 போட்டிகளிலும் வென்று இங்கிலாந்தை தோற்கடிக்கும் என கங்குலி கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் 3வது போட்டியில் அஸ்வின் முழுமையாக விளையாடாமலேயே வெற்றி கண்ட இந்தியாவின் தன்னம்பிக்கை தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளதால் இங்கிலாந்து வெல்வது கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பஸ்பால் நன்றாக உள்ளது. ஆனால் அதை பயன்படுத்தி இந்திய சூழ்நிலைகளில் இங்கிலாந்து வெற்றி காண்பது மிகவும் கடினம்”

“எனவே இத்தொடரில் இந்தியா இங்கிருந்து தோற்றால் நான் ஆச்சரியப்படுவேன். இந்த நேரத்தில் விராட் கோலி, கேஎல் ராகுல் போன்ற வீரர்கள் இல்லாமல் இந்தியா விளையாடுவதை நீங்கள் தயவு செய்து நினைக்க வேண்டும். இந்திய அணி இளம் வீரர்களை மட்டுமே கொண்டுள்ளது. அப்படி இருந்தும் இங்கிலாந்து தடுமாறுகிறது”

இதையும் படிங்க: இந்தமுறை தோனியை பார்க்கும் போது என் கனவு நினைவாயிடும். இளம்வீரர் துருவ் ஜுரேல் – அளித்த பேட்டி

“3வது போட்டியின் பாதியிலேயே அஸ்வினை வீட்டுக்கு செல்ல அனுமதிக்கும் அளவுக்கு இந்தியா தன்னம்பிக்கையை கொண்டுள்ளது. எனவே இந்திய அணி தற்போது அதிக உத்வேகத்தை கொண்டுள்ள அணியாக செயல்பட்டு வருகிறது” என்று கூறினார். இதைத்தொடர்ந்து இத்தொடரின் மூன்றாவது போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement