இந்தமுறை தோனியை பார்க்கும் போது என் கனவு நினைவாயிடும். இளம்வீரர் துருவ் ஜுரேல் – அளித்த பேட்டி

Dhruv-Jurel
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது போட்டியின் போது இந்திய அணிக்காக அறிமுகமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜுரேல் தனது முதல் போட்டியிலேயே சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அசத்தினார்.

இதன் காரணமாக அவரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் வேளையில் எதிர்வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி ராஞ்சி நகரில் நடைபெற இருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிலும் அவர் இடம்பிடித்து விளையாடுவார் என்பது உறுதியாகி உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தோனியின் சொந்த ஊரான ராஞ்சி நகரில் விளையாட இருப்பது குறித்து பேசியுள்ள துருவ் ஜுரேல் கூறுகையில் : நான் தோனியை முதல்முறையாக பார்த்தபோது அப்படியே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என் முன்னால் அவர் நிற்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

அவர் உடனாக முதல் சந்திப்பு எனக்கு 2021-ஆம் ஆண்டு ஏற்பட்டது. அந்த முதல் சீசனின் போது நான் அவரை பார்க்கும்போது உண்மையிலேயே நாம் அவரை தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமா என்பதை பரிசோதிக்க என்னை நானே கிள்ளி பார்த்துக் கொண்டேன்.

- Advertisement -

நான் ஏற்கனவே தோனியை பார்த்திருந்தாலும் இம்முறை இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிவிட்டு அவரை பார்க்கப் போகிறேன். என்னுடைய கனவே நான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பின்னர் அவரை பார்க்க வேண்டும் என்பதுதான். இம்முறை நான் இந்திய அணிக்காக அறிமுகம் ஆகிவிட்டு தற்போது அவரை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.

இதையும் படிங்க : 215 ரன்ஸ்.. 194 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆஸியை வெளுத்து வாங்கிய சிஎஸ்கே ஜோடி.. மிரட்டிய நியூஸிலாந்து

அவருடன் எப்போது பேசினாலும் நிறைய விடயங்களை கற்றுக்கொள்ள முடியும். ராஞ்சி நகரில் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற இருப்பதால் அவரை எப்படியும் சந்திப்பேன் என்று நினைப்பதாக துருவ் ஜுரேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement