தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான விஜய் சங்கர் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமாகி 9 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அதேபோன்று 2019 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான அவர் 12 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம் பிடித்திருந்தார்.
ஓய்வை அறிவித்த விஜய் ஷங்கர் :
ஆனால் பெரியளவில் அவரிடம் இருந்து சிறப்பான செயல்பாடு வெளிப்படவில்லை. இதன் காரணமாக இந்திய அணிக்காக அறிமுகமான ஒரே ஆண்டில் நீக்கப்பட்ட அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்காமல் தற்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளை பொருத்தவரை கடந்து 2014 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை விளையாடிய அவர் 78 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
கடைசியாக கடந்த ஆண்டு சென்னை அணிக்காக விளையாடிய அவர் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் இந்த ஆண்டு எந்த ஒரு ஐபிஎல் அணியும் அவரை தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் தற்போது 35 வயதான விஜய் சங்கர் உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : புதிய வாய்ப்புகளை தேடவும் தொடர்ந்து அதிக கிரிக்கெட் விளையாடவும் இந்த முடிவை எடுத்துள்ளேன். 10 வயதில் ஆரம்பித்த இந்த பயணம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நின்றுள்ளது. இந்திய அணிக்காக விளையாடியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
இதையும் படிங்க : டெஸ்ட் போட்டிகளில் இருந்து கேப்டன் பதவியை துறந்தது ஏன்? – விராட் கோலி வெளிப்படை
தேசத்திற்காக ஆடியது பெருமைக்குரிய ஒரு விடயமாகும். பிசிசிஐ மற்றும் இந்திய கிரிக்கெட் அணிக்கு எனது நன்றிகள். பல ஞாபகங்கள் எனக்கு இந்திய அணியில் உள்ளன. அதே போன்று என்னை ஆதரித்த ரசிகர்களுக்கும் நன்றி என விஜய் சங்கர் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



