ஒற்றை வார்த்தையை சொல்லி கலாய்த்த ரசிகர்கள்.. கோபத்தில் பாட்டிலால் அடிக்க சென்ற பாபர் அசாம்

Babar Azam Fans
- Advertisement -

பாகிஸ்தானில் பிஎஸ்எல் டி20 கிரிக்கெட் தொடரின் 2024 சீசன் நடைபெற்று வருகிறது. அதில் பிப்ரவரி 23ஆம் தேதி முல்தானில் நடைபெற்ற ஒன்பதாவது லீக் போட்டியில் பெஷாவர் ஜால்மி மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெசாவர் 20 ஓவர்களில் 179/8 ரன்கள் எடுத்து அசத்தியது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹசிபுல்லா கான் 37, கேப்டன் பாபர் அசாம் 31, ரோவ்மன் போவல் 23 ரன்கள் எடுக்க முல்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது அலி, டேவிட் வில்லி, உஷாமா மிர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 180 ரன்களை துரத்திய முல்தான் அணி முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவர்களில் 174 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

- Advertisement -

கோபமான பாபர்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக டேவிட் மாலன் 52, யாசிர் கான் 43 ரன்கள் எடுத்த போதிலும் இதர வீரர்கள் கை கொடுக்க தவறினர். பெசாவர் சார்பில் அதிகபட்சமாக ஆரிப் யாக்கூப் 3 விக்கெட்களை எடுத்தனர். அதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் பெஷாவர் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 31 (26) ரன்களுக்கு அவுட்டான பாபர் அசாம் பெவிலியன் திரும்பியதும் பவுண்டரி எல்லையில் இருந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது மைதானத்தில் பின்பக்கத்தில் இருந்த ஒரு தரப்பு ரசிகர்கள் “ஜிம்பாபர் ஜிம்பாபர்” என்று பாபர் அசாம் காதில் கேட்கும் அளவுக்கு வெறித்தனமாக கோசமிட்டு கலாய்த்தனர். அதனால் வெறியான பாபர் அசாம் திரும்பிப் பார்த்து அந்த ரசிகர்களிடம் “எங்கே முடிந்தால் என் பக்கத்தில் வந்து சொல்லுங்கள்” என்ற வகையில் கையில் சைகை கொடுத்து பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

ஆனால் அப்போதும் ஓயாத அந்த ரசிகர்கள் மீண்டும் வேகமாக அதே கோசமிட்டு கடுப்பேற்றினார்கள். அதனால் கோபமான பாபர் அசாம் தமக்கு முன்பிருந்த மேஜையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அந்த ரசிகர்களின் முகத்தில் எறிவதற்காக கையை ஓங்கினார். இருப்பினும் கேமராக்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள், வெளிநாட்டு வீரர்கள் இருந்ததால் கோபத்தை கட்டுப்படுத்திய அவர் கையை கீழே இறக்கி அமைதியாக இருந்தார்.

இதையும் படிங்க: இரண்டாம் நாள் ஆட்டத்தில் அம்பயர் தர்மசேனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பென் ஸ்டோக்ஸ் – என்ன நடந்தது?

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கான காரணம் என்னவெனில் தம்முடைய கேரியரில் பெரும்பாலான ரன்களை ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் போன்ற கத்துக்குட்டிகளுக்கு எதிராக குவித்து நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறிய பாபர் அசாம் இந்தியா போன்ற வலுவான அணிகளுக்கு எதிராக தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார். அதனால் சமூக வலைதளங்களில் ஜிம்பாபர் என்று கலாய்த்து வந்த ரசிகர்கள் இப்போட்டியில் நேரடியாக பாபர் அசாமுக்கு முன்பாக அப்படி கிண்டலடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement