இரண்டாம் நாள் ஆட்டத்தில் அம்பயர் தர்மசேனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பென் ஸ்டோக்ஸ் – என்ன நடந்தது?

Stokes
- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த வேளையில் இங்கிலாந்து அணியானது 2 போட்டிகளில் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது.

அதன் காரணமாக ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 23-ஆம் தேதி ராஞ்சி நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தங்களது முதல் இன்னிங்சில் 353 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் 122 ரன்களையும், வேகப்பந்து வீச்சாளர் ராபின்சன் 58 ரன்களையும் குவித்தனர்.

அதனை தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தங்களது முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 73 ரன்களையும், சுப்மன் கில் 38 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒரு விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இந்த போட்டியின் தேநீர் இடைவெளிக்கு முன்பாக அதாவது கிட்டத்தட்ட மதியம் 2.15 மணி அளவிலேயே மைதானத்தில் இருந்த மின் விளக்குகள் ஒளிர விடப்பட்டன.

இதையும் படிங்க : பை பை ரோஹித்.. பை பை ரோஹித்.. ரோஹித் சர்மா ஆட்டமிழந்ததும் கலாய்த்த இங்கிலாந்து ரசிகர்கள் – விவரம் இதோ

இதனை கண்ட ஸ்டோக்ஸ் அம்பயர் குமார் தர்மசேனாவிடம் சென்று எதற்காக மின்விளக்குகளை எறிய விட்டிருக்கிறீர்கள்? பகலிலேயே இப்படி செய்யலாமா? என்பது போல அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் இப்படி வாக்குவாதம் செய்த சில நிமிடங்களிலேயே தேநீர் இடைவெளிக்காக அனைவரும் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement