பை பை ரோஹித்.. பை பை ரோஹித்.. ரோஹித் சர்மா ஆட்டமிழந்ததும் கலாய்த்த இங்கிலாந்து ரசிகர்கள் – விவரம் இதோ

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது பிப்ரவரி 23-ஆம் தேதி ராஞ்சி நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தங்களது முதல் இன்னிங்சில் 353 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் 122 ரன்களையும், வேகப்பந்து வீச்சாளர் ராபின்சன் 58 ரன்களையும் குவித்தனர்.

இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 73 ரன்களையும், சுப்மன் கில் 38 ரன்களையும் குவித்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜுரேல் 30 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அதைத் தொடர்ந்து மூன்றாம் நாள் ஆட்டத்தில் நாளை இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸை துவங்கிய போது முதல் விக்கெட் 4 ரன்களில் இருந்த போது ரோகித் சர்மா ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

இந்த போட்டியில் 9 பந்துகளை சந்தித்த அவர் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அப்படி அவர் ஆட்டமிழந்து வெளியேறிய போது இங்கிலாந்து அணி ரசிகர்கள் அவரை வழி அனுப்பிய விதம் தற்போது இணையத்தில் அனைவரது மத்தியிலும் கவனத்தை வைத்துள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து ரசிகர்கள் ரோகித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறியதும் “பை பை ரோஹித், பை பை ரோஹித்” என பாட்டு பாடிய படியே விமர்சையாக வழி அனுப்பியிருந்தனர்.

இதையும் படிங்க : 99/4 என மூழ்கிய மும்பை.. 384 ரன்ஸ்.. அறிமுக போட்டியிலேயே தனி ஒருவனாக தூக்கிய முஷீர் கான்

ரோகித் சர்மா கடைசியாக விளையாடிய 20 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் இரண்டு சதம் மட்டுமே அடித்துள்ளார். அதிலும் குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த நடப்பு தொடரில் ஒரு சதம் மட்டுமே பதிவு செய்த அவர் மற்றப்படி அரை சதம் கூட அடிக்காமல் இருந்து வருகிறார். இதன்காரணமாகவே அவரை கிண்டல் செய்யும் விதமாக இங்கிலாந்து ரசிகர்கள் இப்படி நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement