99/4 என மூழ்கிய மும்பை.. 384 ரன்ஸ்.. அறிமுக போட்டியிலேயே தனி ஒருவனாக தூக்கிய முஷீர் கான்

Musheer Khan
- Advertisement -

இந்தியாவின் பழமை வாய்ந்த உள்ளூர் தொடரான ரஞ்சிக் கோப்பையின் 2024 சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதில் லீக் சுற்றில் தேவையான வெற்றிகளை பெற்ற அணிகள் காலிறுதியில் விளையாடி வருகின்றன. அதில் பிப்ரவரி 23ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் மும்பை மற்றும் பரோடா அணிகள் மோதின.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பிரிதிவி ஷா 33 ரன்களில் அவுட்டானார். அந்த நிலையில் வந்த முசீர் கான் நிதானமாக விளையாடிய நிலையில் மறுபுறம் தடுமாறிய புபேன் லால்வானி 19 ரன்களில் அவுட்டானார். போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த சம்ஸ் முலானி 4 ரன்களில் அவுட்டானதால் 99/4 என மும்பை தடுமாறியது.

- Advertisement -

முஷீர் கான் அபாரம்:
அப்போது வந்த சூர்யன்ஷ் செக்டேவும் 20 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய முஷீர் கான் பரோடா பவுலர்களுக்கு சவாலை கொடுத்து சதமடித்து அசத்தினார். குறிப்பாக கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அண்டர்-19 உலகக் கோப்பையில் 360 ரன்கள் அடித்து இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் இந்த போட்டியில் காயமடைந்த சிவம் துபேவுக்கு பதிலாக அறிமுகமாக களமிறங்கினார்.

அந்த வாய்ப்பில் அறிமுகப் போட்டியிலேயே சதமடித்த அவருடன் அடுத்ததாக வந்த ஹர்டிக் தாமோர் 6வது விக்கெட்டுக்கு 181 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதமடித்து 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அதற்கடுத்ததாக வந்த வீரர்கள் பரோடாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினார்கள்.

- Advertisement -

ஆனால் எதிர்புறம் தொடர்ந்து பரோடா பவுலர்களை பொறுமையின் சிகரமாக எதிர்கொண்ட முஷீர் கான் 357 பந்துகளில் கடைசி வரை அவுட்டாகாமல் இரட்டை சதமடித்து 203* ரன்கள் விளாசினார். அந்த வகையில் தன்னுடைய அறிமுகப் போட்டியில் அடித்த முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றிய முசீர் கான் 99/4 என மூழ்கிய மும்பையை 384 ரன்கள் குவிப்பதற்கு முக்கிய பங்காற்றினார்.

இதையும் படிங்க: உதயமான அதிரடி நாயகன்.. சேவாகின் 16 வருட சாதனையை தூளாக்கிய ஜெய்ஸ்வால்.. 22 வயதிலேயே மாஸ் சாதனை

சமீபத்தில் இந்தியாவுக்காக அறிமுகமான சர்பராஸ் கான் தம்பியான அவர் இப்படி உள்ளூர் கிரிக்கெட்டில் அண்ணனை மிஞ்சும் அளவுக்கு அபாரமாக விளையாடுவது ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது. பரோடா சார்பில் அதிகபட்சமாக பார்க்கவ் பாட் 7 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய பரோடா 2வது நாள் முடிவில் 127/2 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணிக்கு ஷாஸ்வட் ராவாட் 69*, விஸ்ணு சோலங்கி 23* ரன்கள் எடுத்து போராடி வருகின்றனர்.

Advertisement