உதயமான அதிரடி நாயகன்.. சேவாக்கின் 16 வருட சாதனையை தூளாக்கிய ஜெய்ஸ்வால்.. 22 வயதிலேயே மாஸ் சாதனை

Jaiswal Sehwag 2
- Advertisement -

ராஞ்சியில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தடுமாறி வருகிறது. பிப்ரவரி 23ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து போராடி 353 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜோ ரூட் சதமடித்து 122* ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா இரண்டாவது நாள் முடிவில் 219/7 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை விட இன்னும் 135 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக இளம் வீரர் ஜெய்ஸ்வால் மீண்டும் தனி ஒருவனாக 73 ரன்கள் எடுத்து போராடி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதிரடி நாயகன்:
தற்போது களத்தில் துருவ் ஜுரேல் 30*, குல்தீப் யாதவ் 17* ரன்களுடன் இருக்கும் நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 4* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். முன்னதாக இந்த தொடரில் முதல் போட்டியிலிருந்தே வெறும் 22 வயதாகும் யசஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக செயல்பட்டு இங்கிலாந்துக்கு தனி ஒருவனாக சவாலை கொடுத்து வருகிறார்.

குறிப்பாக இரண்டாவது போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் யாருமே 35 ரன்கள் கூட எடுக்காத போது 209 ரன்கள் விளாசிய அவர் 3வது போட்டியில் 214* ரன்கள் குவித்து இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற முக்கிய பங்காற்றினார். அதிலும் குறிப்பாக மூன்றாவது போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அவர் மொத்தம் 12 சிக்சர்கள் அடித்தார்.

- Advertisement -

அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற வாசிம் அக்ரமின் உலக சாதனையை அவர் சமன் செய்தார். அதன் காரணமாக ஜெயஸ்வால் தான் இந்திய அணியின் புதிய சேவாக் என்று மைக்கேல் வாகன், டேனிஷ் கனேரியா போன்ற முன்னாள் வீரர்கள் வெளிப்படையாக பாராட்டினார். அந்த சூழ்நிலையில் இந்த போட்டியில் 1 சிக்ஸரை அடித்துள்ள ஜெய்ஸ்வால் இத்தொடரில் இதுவரை மொத்தம் 23* சிக்சர்கள் அடித்துள்ளார்.

இதையும் படிங்க: திறமை இருந்தும் 2 தப்பு பண்ணிட்டாங்க.. 4வது டெஸ்டில் இந்தியா தடுமாறுவதன் காரணம் பற்றி ஸ்டுவர்ட் ப்ராட்

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் வீரேந்திர சேவாக்கின் 16 வருட சாதனையை உடைத்துள்ள ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டில் புதிய அதிரடி நாயகன் உதயமாகியுள்ளார் என்றால் மிகையாகாது. அந்த பட்டியல்:
1. யசஸ்வி ஜெய்ஸ்வால் : 23* சிக்ஸர்கள் 2024இல்*
2. விரேந்தர் சேவாக் : 22* சிக்ஸர்கள் 2008இல்
3. ரிஷப் பண்ட் : 21 சிக்ஸர்கள் 2022இல்
4. ரோஹித் சர்மா : 20 சிக்ஸர்கள் 2019இல்
5. மயங் அகர்வால் : 18 சிக்ஸர்கள் 2019இல்

Advertisement