திறமை இருந்தும் 2 தப்பு பண்ணிட்டாங்க.. 4வது டெஸ்டில் இந்தியா தடுமாறுவதன் காரணம் பற்றி ஸ்டுவர்ட் ப்ராட்

Stuart Broad 3
- Advertisement -

பிப்ரவரி 23ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அந்த சூழ்நிலையில் துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 353 ரன்கள் எடுத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக நட்சத்திர வீரர் ஜோ ரூட் சதமடித்து 122 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் இரண்டாவது நாள் முடிவில் 212/7 ரன்கள் எடுத்துள்ள இந்தியா இன்னும் இங்கிலாந்தை விட 134 ரன்கள் பின்தங்கிய நிலையில் தடுமாறி வருகிறது.

- Advertisement -

ஸ்டுவர்ட் ப்ராட் கருத்து:
இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 73 ரன்கள் எடுக்க களத்தில் துருவ் ஜுரேல் 30*, குல்தீப் யாதவ் 17* ரன்களுடன் போராடி வருகின்றனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 4* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்நிலையில் இப்போட்டியில் ராஞ்சி மைதானத்தில் இந்தியா சுழலுக்கு பிட்ச் அமைத்தது ஏன் என்று புரியவில்லை என முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.

மேலும் பும்ராவுக்கு ஓய்வு கொடுத்ததையும் புரிந்துக்கொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கும் அவர் இந்த 2 காரணங்களே இந்திய அணிக்கு பின்னடைவை கொடுத்து வருவதாக கூறியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இந்த டெஸ்ட் போட்டியை பெரிய அளவில் பார்க்கவில்லை. இருப்பினும் தற்போது பார்க்கிறேன். தற்சமயத்தில் இங்கிலாந்து அதிகமாகவே மேலே இருக்கிறது”

- Advertisement -

“வெடிப்பு, சமமற்ற பவுன்ஸ் இருக்கும் நிலையில் ஸ்பின்னர்கள் துல்லியமாக பந்து வீசுகின்றனர். இது போன்ற பிட்ச் கிடைப்பது பவுலர்களின் கனவாகும். 350 ரன்கள் அடித்துள்ள இங்கிலாந்து சராசரியை விட 100 ரன்கள் அதிகமாக எடுத்துள்ளதாக தெரிகிறது. முதலில் பேட்டிங் செய்து போட்டியில் ஆதிக்கத்தை செலுத்துகிறார்கள். பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதை புரிந்து கொள்ள முடியவில்லை”

இதையும் படிங்க: கோலியும் இல்ல.. கேரியர் முடிஞ்சுதா? அவர் இருந்திருந்தா இந்தியா இப்படி தடுமாறாது.. ஸ்டுவர்ட் ப்ராட் அதிருப்தி

“கடந்த போட்டியில் 8 ஓவர்களில் அவர் இங்கிலாந்துக்கு பெரிய பின்னடைவை கொடுத்தார். இதுவரை இங்கிலாந்து பற்றி பதிவிட்டேன். இந்தியாவைப் பற்றியும் பார்ப்போம். தங்களுடைய சொந்த மண்ணில் ஃபிளாட்டான பிட்ச்களில் மற்ற அணிகளை ஆல் அவுட் செய்யும் அளவுக்கு ஸ்பின்னர்களைக் கொண்ட இந்தியா சிறப்பான அணியாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் இது போன்ற பிட்ச்சை ஏன் அமைத்தார்கள்? என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.

Advertisement