சேப்பாக்கத்தில் மேட்ச் பாக்கணுமா? ரசிகர்களுக்காக டிக்கெட் விற்பனை குறித்த முக்கிய அறிவிப்பு – விவரம் இதோ

CSK
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு துவங்கவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2024-ஆம் ஆண்டிற்கான 17-வது சீசனானது தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பினை பெற்றுள்ளது. அதன்படி எதிர்வரும் மார்ச் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கவுள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத இருக்கின்றன.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இறுதி போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்ததோடு இந்த ஆண்டு நடப்பு சாம்பியனாக கம்பீரமாக இந்த தொடரில் அடியெடுத்து வைக்கிறது.

- Advertisement -

அதோடு இந்த ஆண்டு சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு கடைசி சீசன் என்பதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. எனவே தோனி கடைசியாக மைதானத்தில் விளையாடுவதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

எப்படியாவது ஒருமுறை தோனியை மைதானத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் ரசிகர்களுக்கு தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் மேலும் ஒரு நற்செய்தியை வழங்கியுள்ளது. அதாவது கடந்த ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளின் போது டிக்கெட்டுகள் கவுண்டரில் விற்பனை செய்யப்பட்டன.

- Advertisement -

அப்படி கவுண்டரில் பெற்ற டிக்கெட்டுகளை பலரும் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்றதால் பல ரசிகர்கள் டிக்கெட் வாங்க முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்தனர். இந்நிலையில் இவற்றையெல்லாம் தடுக்கும் விதமாக தற்போது சென்னை அணியின் நிர்வாகம் சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கும் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2024 : மும்பை அதுல தப்பு பண்ணிட்டாங்க.. பாண்டியா கப் ஜெயிக்கிறது கஷ்டம் தான்.. ராயுடு ஓப்பன்டாக்

இதன் காரணமாக ஆன்லைனில் சரியான விலைக்கு ரசிகர்கள் அனைவரும் டிக்கெட் பெற முடியும். இருப்பினும் சென்னை அணிகள் மோதும் போட்டிக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம் என்பதனால் டிக்கெட் விற்பனை ஆரம்பிக்கும் சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement