ஐபிஎல் 2024 : மும்பை அதுல தப்பு பண்ணிட்டாங்க.. பாண்டியா கப் ஜெயிக்கிறது கஷ்டம் தான்.. ராயுடு ஓப்பன்டாக்

Ambati Rayudu
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை ஹர்திக் பாண்டியா தலைமையில் 6வது கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்க உள்ளது. ஆரம்ப காலங்களில் சச்சின் தலைமையில் ஒரு கோப்பையை வெல்வதற்கே தடுமாறிய மும்பை இந்தியன்ஸ் 2013இல் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா தலைமையில் குறுகிய காலத்தில் 5 சாம்பியன் பட்டங்களை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைத்தது.

இருப்பினும் சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் 36 வயதை கடந்து விட்ட ரோஹித் சர்மா பேட்டிங்கில் பெரிய ரன்களை குவிக்க தடுமாறி வருகிறார். அதன் காரணமாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு அவரை கழற்றி விட்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் குஜராத் அணியை தலைமை தாங்கிக்கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவை வலுக்கட்டாயமாக வாங்கி தங்களுடைய கேப்டனாக அறிவித்துள்ளது.

- Advertisement -

ராயுடு கருத்து:
இது ஒரு புறமிருக்க கடந்த உலகக் கோப்பையில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா தற்போது குணமடைந்து ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார். அதன் காரணமாக கடந்த ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த டி20 தொடரில் கேப்டனாக செயல்பட்ட ரோஹித் சர்மா 2024 டி20 உலகக் கோப்பையிலும் இந்திய அணியை வழி நடத்த உள்ளது 100% உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் குறைந்தபட்சம் இந்த வருடம் மும்பை தங்களுடைய கேப்டனாக ரோஹித் சர்மாவை தொடர்ந்திருக்க வேண்டும் என்று அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது இந்தியாவின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா மும்பை சாதாரண வீரராக விளையாடுவது ஹர்திக் பாண்டியாவுக்கு பெரிய அழுத்தத்தை உண்டாக்கும் என்று ராயுடு கூறியுள்ளார். அது போக பும்ரா, சூரியகுமார் யாதவ் ஆகியோரும் சமீப காலங்களில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டதாக ராயுடு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்ட நட்சத்திர வீரர்களை சரியாக வழி நடத்தி 2024 ஐபிஎல் கோப்பையை ஹர்திக் பாண்டியா மும்பைக்கு வென்று கொடுப்பது கடினம் என்று தெரிவிக்கும் ராயுடு இது பற்றி பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா இன்னும் ஒரு வருடம் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும். அவருடைய தலைமையில் பாண்டியா சாதாரண வீரராக ஒரு வருடம் விளையாடி பின்னர் மும்பையின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்”

இதையும் படிங்க: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கும் போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்பு – காரணம் இதுதான்

“ரோகித் சர்மா இப்போதும் இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கிறார். எனவே குஜராத் அணியிலிருந்து வந்ததும் மும்பை அணியின் கேப்டனாக செயல்படுவது பாண்டியாவுக்கு கடினமாக இருக்கும். ஏனெனில் ஏற்கனவே மும்பை நிறைய கோப்பைகளை வென்றுள்ளதால் அவர் மீது எதிர்பார்ப்பும் அழுத்தமும் அதிகமாக இருக்கும். குறிப்பாக அனைத்து நட்சத்திர வீரர்களையும் கையாள்வது பாண்டியாவுக்கு எளிதாக இருக்காது” என்று கூறினார்.

Advertisement