பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கும் போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்பு – காரணம் இதுதான்

Chinnaswamy-Stadium
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள ஐபிஎல் தொடரானது 2024-ஆம் ஆண்டிற்கான 17-வது சீசனை கோலாகலமாக துவங்க இருக்கிறது. இந்த தொடருக்கான முதல் போட்டி மார்ச் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத இருக்கின்றன.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதினால் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்ட வேளையில் அந்த அட்டவணையில் மூன்று போட்டிகள் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்க இருக்கின்றன.

- Advertisement -

அதன்படி மார்ச் 25-ஆம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும், மார்ச் 29-ஆம் தேதி கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும், ஏப்ரல் 2-ஆம் தேதி லக்னோ அணிக்கு எதிரான போட்டியிலும் பெங்களூரு அணி சின்னசாமி மைதானத்தில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது பெங்களூரில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருப்பதினால் சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஐநாவால் பெங்களூரு நகரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்ட வேளையில் கோடை காலத்திற்கு முன்னதாகவே தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன. ஏனெனில் மூன்று போட்டிகளை நடத்தும் வேளையில் அதிகளவு மைதானத்திற்கு தண்ணீர் தேவைப்படும் என்பதனால் போட்டிகளை அங்கு நடத்த வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : இதை மட்டும் செஞ்சா போதும்.. 2024 டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பண்ட் விளையாடுவாரு.. ஜெய் ஷா அறிவிப்பு

ஒருவேளை பெங்களூரு கிரிக்கெட் நிர்வாகம் இதுகுறித்து கலந்து ஆலோசித்து போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் நடத்த முடியாது என்று அறிவித்தால் பெங்களூருவில் நடைபெற இருக்கும் போட்டிகள் அனைத்தும் விசாகப்பட்டினம் அல்லது கொச்சி ஆகிய இடங்களுக்கு மாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்து கர்நாடக மாநில கிரிக்கெட் வாரியம் விரைவில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த இருப்பதாகவும் அதன் பின்னர் போட்டிகள் குறித்த அதிகாரவபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement