இதை மட்டும் செஞ்சா போதும்.. 2024 டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பண்ட் விளையாடுவாரு.. ஜெய் ஷா அறிவிப்பு

Jay Shah 8
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் ரிசப் பண்ட் ஐபிஎல் 2024 ஐபிஎல் டி20 தொடரில் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தடுமாற்றமாக விளையாடினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றிய அவர் கடந்த 2022 டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி மிகப்பெரிய காயத்தை சந்தித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பின்னர்.

அதனால் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல், ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பை ஆகிய 3 முக்கிய தொடர்களில் விளையாடாத அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு காயத்திலிருந்து குணமடைந்து வந்தார். அந்த வகையில் ஒரு வருடத்திற்கும் மேலாக கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்த அவர் தற்போது மீண்டும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதனால் 2024 ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவதற்கு ஃபிட்டாக இருப்பதாக என்சிஏ சான்றிதழ் வழங்கியது.

- Advertisement -

ஜெய் ஷா அறிவிப்பு:
இருப்பினும் குணமடைந்த பின் இன்னும் எவ்விதமான உள்ளூர் போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. அதன் காரணமாக 2024 ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் அவர் கேப்டனாக செயல்படுவாரா அல்லது விக்கெட் கீப்பிங் செய்வாரா அல்லது பேட்ஸ்மேனாக மட்டும் அதுவும் இம்பேக்ட் வீரராக விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

இந்நிலையில் 2024 டி20 உலகப் கோப்பையில் ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு பெரிய சொத்தாக இருப்பார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதனால் ஐபிஎல் தொடரில் ஃபிட்டாகி விக்கெட் கீப்பராக நன்றாக விளையாடும் பட்சத்தில் 2024 டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்படுவார் என்பதையும் ஜெய் ஷா உறுதி செய்துள்ளார். இது பற்றி பிடிஐ இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“வலைப் பயிற்சியில் தற்போது அவர் பேட்டிங் மற்றும் கீப்பிங் ஆகிய வேலைகளை நன்றாக செய்கிறார். எனவே அவர் ஃபிட்டாக இருக்கிறார் என்று நாங்கள் விரைவில் அறிவிப்போம். ஒருவேளை அவர் டி20 உலகக் கோப்பையில் எங்களுக்காக விளையாடினால் அது பெரியதாக இருக்கும். அவர் உங்களுடைய மிகப்பெரிய சொத்தை போன்ற வீரர். எனவே அவர் விக்கெட் கீப்பிங் செய்தால் டி20 உலகக் கோப்பையிலும் விளையாட முடியும்”

இதையும் படிங்க: முகமது ஷமி 2024 டி20 உலகக் கோப்பையிலும் ஆடமாட்டாரு.. கம்பேக் தேதியை அறிவித்த ஜெய் ஷா

“அதற்கு ஐபிஎல் தொடரில் அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை பார்ப்போம்” என்று கூறினார். இந்த நிலையில் டி20 உலகக் கோப்பைக்கு துவங்க இன்னும் இரண்டரை மாதங்கள் இருப்பதால் அதற்குள் அவர் முழுமையாக ஃபிட்டாகி விடுவார் என்பதில் சந்தேகமில்லை. அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக விளையாடி டி20 உலகக் கோப்பையிலும் விளையாடுவதற்கு முயற்சிப்பார் என்று நம்பலாம்.

Advertisement