தொப்பி நம்பரை பாத்துருக்கீங்களா.. லக்னோவுக்காக நான் விளையாட காரணமே தல தோனி தான்.. ராகுல் பேட்டி

KL Rahul 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி முதல் 8 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. குறிப்பாக நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியை இந்த சீசனில் எதிர்கொண்ட 2 போட்டிகளிலும் லக்னோ தோற்கடித்து அசத்தியது. அதனால் புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடத்திற்குள் இருக்கும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல போராடி வருகிறது.

மேலும் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக 2022இல் தோற்றுவிக்கப்பட்ட அந்த அணி அவருடைய தலைமையில் முதல் வருடத்திலேயே பிளே ஆஃப் சுற்றுக்கு சென்று அசத்தியது. இந்நிலையில் 2022ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ அணிக்காக தாம் விளையாட சம்மதிப்பதற்கு எம்எஸ் தோனி தான் முக்கிய காரணம் என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தொப்பி நம்பர்:
அதாவது 2008ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட சிஎஸ்கே அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி பொறுப்பேற்றார். அதனால் அகர வரிசையை தாண்டி கேப்டன் என்பதால் எம்எஸ் தோனி தான் சிஎஸ்கே அணியின் முதல் வீரராக பதிவு செய்யப்பட்டார். அதன் காரணமாக எம்எஸ் தோனி அணிந்து விளையாடும் சிஎஸ்கே அணியின் தொப்பியில் 1 என்ற நம்பர் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அதை பலமுறை தாம் பார்த்துள்ளதாக தெரிவிக்கும் ராகுல் புதிதாக ஒரு அணிக்கு கேப்டனாக விளையாடினால் மட்டுமே 1வது நம்பர் தொப்பி கிடைக்கும் என்பதால் லக்னோவுக்கு விளையாட சம்மதித்ததாக கூறியுள்ளார். இது பற்றி அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் துவங்கப்பட்டது முதல் இளம் வீரர்களான நாங்கள் அது எவ்வளவு பெரிய இடம் என்பதை பார்த்தோம்”

- Advertisement -

“கிரிக்கெட்டில் ஐபிஎல் எவ்வளவு பெரிய அளவுகோல் என்பதையும் அதற்கு மக்கள் எவ்வளவு அன்பு கொடுக்கிறார்கள் என்பதையும் அது எவ்வளவு பொழுதுபோக்கை கொடுக்கிறது என்பதையும் நாங்கள் பார்த்தோம். எனவே அது ஐபிஎல் தொடரில் நீங்கள் விளையாடுவதற்கான உந்துதலை கொடுக்கிறது. அதில் மற்ற அணிகளுக்காக நான் விளையாடது துவங்கிய போது எம்எஸ் தோனியை பார்ப்பேன். குறிப்பாக அவருடைய தொப்பியில் எப்போதும் நம்பர் 1 இருக்கும்”

இதையும் படிங்க: இது லிஸ்ட்லயே இல்லையே.. வியந்த பாராட்டிய சென்னை.. எச்சரித்த பஞ்சாப்.. சிஎஸ்கே ரசிகர்கள் கவலை

“ஏனெனில் அவர் சிஎஸ்கே அணியின் முதல் வீரர். எனவே எங்களைப் போன்ற வீரர்கள் எப்போதும் முதல் வீரராக வர முடியாது என்று நினைப்போம். இருப்பினும் ஐபிஎல் தொடரில் லக்னோ வந்ததும் அவர்கள் கேப்டனாக விளையாடுவதற்கு நீங்கள் விரும்புகிறீர்களா? என்று என்னிடம் கேட்டனர். அவர்கள் அப்படி சொன்னதுமே கேப்டனாக விளையாடினால் எனக்கு நம்பர் ஒன் தொப்பி கிடைக்குமே என்று நினைத்தேன். அதனால் நான் லக்னோ அணியின் முதல் வீரராக விளையாடுகிறேன்” என்று கூறினார்.

Advertisement