மும்பையை வெளுத்த 22 ஆஸி வீரர்.. யாருமே செய்யாத தெறி சாதனை.. 13 வருட ரெக்கார்ட்டை உடைத்த டெல்லி

DC vs MI
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 27ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு தலைநகர் டெல்லியில் 43வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை முதலில் பந்த வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லிக்கு அபிஷேக் போரேல் மற்றும் ஜேக் பிரேசர்-மெக்குர்க் ஆரம்பம் முதலே மும்பை பவுலர்களை அடித்து நொறுக்கினார்கள்.

அதில் அபிஷேக் சற்று மெதுவாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் பட்டையை கிளப்பிய ஜேக் பிரேசர் வெறும் 15 பந்துகளில் 50 ரன்கள் தொட்டார். அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்ற தன்னுடைய சொந்த சாதனையை அவர் சமன் செய்தார். இதற்கு முன் இதே சீசனில் ஹைதராபாத்துக்கு எதிராக அவர் 15 பந்துகளில் அரை சதமடித்திருந்தார்.

- Advertisement -

தொடர்ந்து பட்டாசாக விளையாடிய அவர் 7.3 ஓவரில் 114 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து டெல்லிக்கு அற்புதமான துவக்கத்தை கொடுத்தார். அதனால் சதத்தை தொடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 11 பவுண்டரி 6 சிக்ஸருடன் 84 (27) ரன்களை 311.11 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானார். சொல்லப்போனால் ஏற்கனவே இதே வருடம் ஹைதராபாத் அணிக்கு எதிராக அவர் 65 (18) ரன்களை 361.11 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருந்தார்.

இதன் வாயிலாக 17 வருட ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் 2 முறை 300க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் 2 அரை சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் ஜேக் பிரேசர்-மெக்குர்க் படைத்தார். அவரை தவிர்த்து வேறு யாருமே ஒரே வருடத்தில் 300+ ஸ்ட்ரைக் ரேட்டில் 2 அரை சதங்கள் அடித்ததில்லை. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அபிஷேக் போரல் 36 (27) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆடரில் அதிரடியாக விளையாடிய ஷாய் ஹோப் தம்முடைய பங்கிற்கு 5 சிக்சர்களை பறக்க விட்டு 41 (17) ரன்கள் குவித்து அவுட்டானார். அதே போல கேப்டன் ரிசப் பண்ட் 29 (19) ரன்கள் குவித்து பும்ரா வேகத்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் ட்ரிஷன் ஸ்டப்ஸ் 48* (25), அக்சர் பட்டேல் 11* (6) ரன்கள் விளாசி அபார பினிஷிங் கொடுத்தனர்.

இதையும் படிங்க: 263 ரன்கள் என்கிற பெரிய இலக்கினை எட்டி நாங்கள் பெற்ற வெற்றிக்கு காரணம் இதுதான் – சாம் கரன் மகிழ்ச்சி

அதனால் டெல்லி 20 ஓவரில் 257/4 ரன்கள் எடுத்தது. அதன் வாயிலாக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு ஐபிஎல் போட்டியில் 250 ரன்கள் குவித்த டெல்லி தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து புதிய சாதனை படைத்தது. அந்த பட்டியல்:
1. 257/4, மும்பைக்கு எதிராக, 2024*
2. 231/4, பஞ்சாப்புக்கு எதிராக, 2011
3. 228/4, கொல்கத்தாவுக்கு எதிராக, 2020
4. 224/3, குஜராத்துக்கு எதிராக, 2024*

Advertisement