ஓனரா இருந்தா என்ன? திட்டுங்க வேணாம்ன்னு சொல்லல ஆனா.. லக்னோ உரிமையாளரை விளாசிய கிரேம் ஸ்மித்

Graeme Smith
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே எட்டாம் தேதி நடைபெற்ற 57வது லீக் போட்டியில் லக்னோவை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. அதனால் புள்ளிப்பட்டியலில் சென்னையை முந்தி 3வது இடத்திற்கு முன்னேறிய ஹைதராபாத் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை அதிகரித்துள்ளது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 48*, ஆயுஷ் படோனி 55* ரன்கள் எடுத்தனர். ஆனால் அதைத் துரத்திய ஹைதராபாத்துக்கு அபிஷேக் சர்மா 75* (28), டிராவிஸ் ஹெட் 89* (30) ரன்கள் அடித்து 9.4 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் படுதோல்வியை சந்தித்த லக்னோ 6வது இடத்திற்கு சரிந்தது.

- Advertisement -

கிரேம் ஸ்மித் அதிருப்தி:
முன்னதாக இந்த போட்டியில் டான்ஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு டீ காக் 2, ஸ்டோய்னிஸ் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் நிதானமாக விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட கேப்டன் கேஎல் ராகுல் 29 (33) ரன்களில் அவுட்டாகி லக்னோவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். சொல்லப்போனால் மொத்த லக்னோ அணியும் மெதுவாக விளையாடியதால் பிட்ச் ஸ்லோவாக இருக்கும் என்று ரசிகர்கள் நினைத்தனர்.

ஆனால் அதே ரன்களை 9.4 ஓவரில் சேசிங் செய்த ஹைதராபாத் அப்படியெல்லாம் எதுவுமில்லை என்று காண்பித்தது. அதனால் கோபமடைந்த லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோனேகா போட்டியின் முடிவில் அப்படிப்பட்ட பிட்ச்சில் இப்படியா மெதுவாக விளையாடுவீர்கள்? என்ற வகையில் கேப்டன் கேஎல் ராகுலை திட்டாத குறையாக பேசினார். அதனால் அதிருப்தியடைந்த ரசிகர்கள் நீங்கள் 16 கோடி சம்பளத்தை கொடுக்கும் உரிமையாளராக இருந்தாலும் பொதுவெளியில் கேப்டனை இப்படி திட்டலாமா? என்று அவரை விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் சம்பளத்தை கொடுக்கும் உரிமையாளராக இருந்தாலும் பொதுவெளியில் கேப்டனை திட்டுவது சரியல்ல என்று சஞ்சீவ் கோனேகாவை முன்னாள் தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் கேப்டன் கிரேம் ஸ்மித் விமர்சித்துள்ளார். இது பற்றி ஜியோ சினிமாவில் அவர் பேசியது பின்வருமாறு. “உரிமையாளர் தன்னுடைய அணியின் மீது மிகவும் ஆர்வமாக உள்ளார். ஏனெனில் அவருடைய அணி முழுமையான தோல்வியை சந்தித்ததால் உணர்ச்சிகள் உருண்டோடின”

இதையும் படிங்க: 146 சிக்ஸ்.. கருணையின்றி அடித்து நொறுக்கும் ஹைதராபாத்.. டெக்கான், சிஎஸ்கே’வை முந்தி 2 மாஸ் சாதனை

“இருப்பினும் இந்த உரையாடல்கள் மூடிய கதவுகளுக்கு பின்னால் நடந்திருக்க வேண்டும். சுற்றிலும் பல கேமராக்கள் உள்ளன” என்று கூறினார். முன்னதாக 2016இல் லீக் சுற்றுடன் வெளியேறிய காரணத்தால் இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் என்ற மரியாதை இல்லாமல் தோனியை புனே அணியின் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து சஞ்சீவ் கோனேகா நீக்கினார். அந்த வரிசையில் தற்போது கேஎல் ராகுலை அவர் பொதுவெளியில் திட்டும் வகையில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement