146 சிக்ஸ்.. கருணையின்றி அடித்து நொறுக்கும் ஹைதராபாத்.. டெக்கான், சிஎஸ்கே’வை முந்தி 2 மாஸ் சாதனை

SRH Team
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 தொடரின் 57வது லீக் போட்டியில் லக்னோவை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ தடுமாற்றமாக விளையாடி 166 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 48*, ஆயுஷ் படோனி 55* ரன்கள் எடுத்தனர்.

அதை துரத்திய ஹைதராபாத் அணியும் தடுமாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் லக்னோ பேட்டிங் செய்த விதத்தை வைத்து பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருப்பதாக அனைவரும் கருதினார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக லக்னோ பவுலர்களை காட்டுத்தனமாக அடித்து நொறுக்கிய அபிஷேக் ஷர்மா 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் 75* (28) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

சரவெடி சாதனை:
அவருடன் சேர்ந்து 167 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து லக்னோ பவுலர்களை சூறையாடிய டிராவிஸ் ஹெட் 8 பவுண்டரி 8 சிக்சருடன் 89* (30) ரன்கள் குவித்தார். அதனால் 9.4 ஓவரிலேயே 167/0 ரன்கள் எடுத்த லக்னோ மிகவும் எளிதாக வெற்றி பெற்றது. இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 150+ இலக்கை அதிவேகமாக வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதெராபாத் சாதனையை உடைத்துள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய வரலாறு படைத்துள்ளது.

இதற்கு முன் 2008ஆம் ஆண்டு மும்பை அணிக்கு எதிராக 155 ரன்கள் இலக்கை டெக்கான் சார்ஜர்ஸ் அணி 12 ஓவரில் சேசிங் செய்ததே முந்தைய சாதனையாகும். அதே போல இந்த வருடம் முழுவதுமே எதிரணிகளை கருணையின்றி அடித்து நொறுக்கி வரும் ஹைதராபாத் அணி மொத்தமாக 146* சிக்சர்கள் பறக்க விட்டுள்ளது. இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த அணி என்ற சென்னையின் சாதனையை உடைத்துள்ள ஹைதராபாத் புதிய சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

இதற்கு முன் கடந்த 2018 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 145 சிக்சர்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். இது போக 9.4 ஓவரிலேயே 167/0 ரன்கள் எடுத்த ஹைதராபாத் ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் 10 ஓவரின் முடிவில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அணி என்ற தங்களுடைய சொந்த சாதனையை உடைத்தது. இதற்கு முன் இதே சீசனில் டெல்லிக்கு எதிராக முதல் 10 ஓவரில் ஹைதராபாத் 158/4 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: என்னப்பா இப்படி அடிக்கிறீங்க.. நல்லவேளை லக்னோ இதை செய்யல.. ஹெட் – அபிஷேக்கை பாராட்டிய சச்சின்

அந்த வகையில் மிரட்டலான வெற்றி பெற்ற ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் சென்னையை முந்தி 3வது இடத்திற்கு முன்னேறியது. அதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பையும் அந்த அணி பிரகாசப்படுத்தியுள்ளது. மறுபுறம் போராடாமலேயே தோல்வியை சந்தித்த லக்னோ 6வது இடத்திற்கு சரிந்துள்ளது.

Advertisement