42/5 என சரிந்த போது கைகொடுத்த சுந்தர், சங்கர்.. மும்பையிடம் சறுக்கிய தமிழ்நாடு.. கம்பேக் கொடுக்குமா?

MI vs TN
- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சிக் கோப்பையின் 2024 சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் லீக் மற்றும் காலிறுதிப் போட்டிகளில் வெற்றி கண்ட தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டி மார்ச் 2ஆம் தேதி துவங்கியது. மகாராஷ்டிராவில் உள்ள எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு சாய் சுதர்சன் 0 நாராயன் ஜெகதீசன் 4 ரன்களில் அவுட்டானார்கள். போதாகுறைக்கு ரஞ்சன் பிரதோஷ் பால் 8, கேப்டன் சாய் கிஷோர் 1, பாபா இந்திரஜித் 11 ரன்களில் துஷார் தேஷ்பாண்டே வேகத்தில் ஆட்டமிழந்தனர். அதனால் 42/5 என ஆரம்பத்திலேயே சரிந்த தமிழ்நாடு 100 ரன்கள் தாண்டுமா என்ற சந்தேகம் காணப்பட்டது.

- Advertisement -

கம்பேக் கொடுக்குமா:
இருப்பினும் அப்போது ஜோடி சேர்ந்த அனுபவ வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் – விஜய் சங்கர் ஆகியோர் மிடில் ஆர்டரில் மும்பைக்கு சவாலை கொடுத்து சரிவை சரி செய்யும் முயற்சித்தனர். ஆனால் 6வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கை கொடுத்த இந்த ஜோடியில் விஜய் சங்கர் 44 ரன்களில் சர்துள் தாகூர் வேகத்தில் அவுட்டானார். அதைத்தொடர்ந்து வந்த முகமது 17, அஜித் ராம் 15, சந்திப் வாரியர் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் மறுபுறம் முடிந்தளவுக்கு போராடிய வாஷிங்டன் சுந்தரம் 43 ரன்களில் கடைசி விக்கெட்டாக அவுட்டானார். அந்த வகையில் சிறப்பாக பந்து வீசி தமிழ்நாடு அணியை 146 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த மும்பை சார்பில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 3, சர்துள் தாகூர் 2, டானுஷ் கோடியன் 2, முஷீர் கான் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த மும்பை அணிக்கு நட்சத்திர வீரர் பிரித்திவி ஷா 5 ரன்களில் குல்தீப் சென் பந்தில் அவுட்டானர். அதே போல மற்றொரு துவக்க வீரர் பூப்பேன் லால்வாணி 15 ரன்களில் கேப்டன் சாய் கிசோர் சுழலில் சிக்கினார். அப்போது நிறைவுக்கு வந்த முதல் நாள் முடிவில் 45/2 ரன்கள் எடுத்துள்ள மும்பை இன்னும் தமிழ்நாட்டை விட 101 ரன்கள் பின் தங்கியுள்ளது. களத்தில் முசீர் கான் 24*, மோஹித் அவஸ்தி 1* ரன்களுடன் உள்ளனர்.

இதையும் படிங்க: இதெல்லாம் இரு காரணமே இல்ல.. திறமையானவரை விடாதீங்க.. ஜெய் ஷா அவர்கிட்ட பேசணும்.. கங்குலி கருத்து

இன்னும் அந்த அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர், ரகானே, தாகூர் போன்ற தரமான நட்சத்திர வீரர்கள் பேட்டிங் செய்ய காத்திருக்கின்றனர். அதனால் தற்சமயத்தில் அந்த அணி இப்போட்டியில் முன்னிலையில் இருப்பதாகவே கருதப்படுகிறது. எனவே இரண்டாவது நாளில் மும்பையை விரைவாக ஆல் அவுட் செய்து தமிழ்நாடு அணி கம்பேக் கொடுக்க போராட உள்ளது.

Advertisement