என்ன இது? சுரண்டி எடுங்க.. உஸ்மான் கவாஜா பேட்டை அனுமதிக்காத அம்பயர்கள்.. விவரம் இதோ

Usman Khawaja.jpeg
- Advertisement -

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 29ஆம் தேதி வெலிங்டன் நகரில் துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா போராடி 383 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேமரூன் கிரீன் சதமடித்து 174* ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து சுமாராக விளையாடி 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 71 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து 204 ரன்கள் வலுவான முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவை 164 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி நியூசிலாந்து கம்பேக் கொடுத்தது.

- Advertisement -

ஸ்ட்ரிக்ட்டானா அம்பயர்கள்:
அதிகபட்சமாக நேதன் லயன் 41 ரன்கள் எடுக்க நியூஸிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 369 ரன்களை சேசிங் செய்யும் நியூசிலாந்து 3வது நாள் முடிவில் 111/3 ரன்கள் எடுத்து போராடி வருகிறது. இன்னும் 258 ரன்கள் வெற்றிக்கு தேவைப்படும் அந்த அணிக்கு களத்தில் ரச்சின் ரவீந்தரா 56*, டார்ல் மிட்சேல் 12* ரன்களுடன் உள்ளனர்.

முன்னதாக இந்த போட்டியில் மூன்றாவது நாளில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜாவின் பேட் ஒரு கட்டத்தில் விரிசல் விட்டது. அதனால் புதிய பேட்டை கொண்டு வருமாறு பெவிலியனில் இருந்த ஆஸ்திரேலிய அணியிடம் அவர் கேட்டார். அதைத் தொடர்ந்து மேத்தியூ ரென்ஷா 3 – 4 பேட்டுகள் அடங்கிய பையைத் தூக்கிக்கொண்டு மைதானத்திற்குள் ஓடி வந்தார்.

- Advertisement -

அதில் தமக்கு தகுந்த பேட்டை எடுத்த உஸ்மான் கவாஜா மீண்டும் பேட்டிங் செய்யத் துவங்கினார். இருப்பினும் அதை பார்த்த அம்பயர்கள் அவருடைய பேட்டின் பின்புறத்தில் புறா போன்ற சின்னம் இருப்பதை கண்டறிந்தனர். அதில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் ஆலிவ் கிளையை வைத்திருக்கும் கருப்பு நிறத்திலான புறா சின்னம் அவருடைய பேட்டில் இருந்தது.

இதையும் படிங்க:இதெல்லாம் இரு காரணமே இல்ல.. திறமையானவரை விடாதீங்க.. ஜெய் ஷா அவர்கிட்ட பேசணும்.. கங்குலி கருத்து

அது ஐசிசி விதிமுறைகளுக்கு எதிராக இருந்ததால் கவாஜாவை பேட்டிங் செய்ய விடாமல் தடுத்த அம்பயர்கள் அதை சுரண்டி எடுக்குமாறு சொன்னார்கள். அதன் காரணமாக தன்னுடைய பேட்டில் இருந்து அந்த சின்னத்தை நீக்கிய பின்பே உஸ்மான் கவாஜா பேட்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்த போட்டியில் நான்காவது நாளில் அபாரமாக விளையாடி வெற்றி பெறுவதற்கு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் போராட உள்ளன.

Advertisement