இதெல்லாம் இரு காரணமே இல்ல.. திறமையானவரை விடாதீங்க.. ஜெய் ஷா அவர்கிட்ட பேசணும்.. கங்குலி கருத்து

Sourav Ganguly 8
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் 2023 – 24 மத்திய சம்பள ஒப்பந்தப் பட்டியலில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர், இசான் கிசான் ஆகிய இரண்டு வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதில் இந்திய அணியில் முக்கிய வீரர்களாக உருவெடுத்த ஸ்ரேயாஸ் ஐயர் 2023 உலகக் கோப்பையில் 530 ரன்கள் அடித்து நன்றாக விளையாடி வந்தார். அதனால் அவர் கடந்த ஒப்பந்தப் பட்டியலில் 3 கோடிகளை சம்பளமாக பெறும் பி பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

அதே போல ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதமடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ள இஷான் கிசான் கடந்த ஒப்பந்த பட்டியலில் ஒரு கோடியை சம்பளமாக பெறும் சி பிரிவில் இடம் பெற்றிருந்தார். இருப்பினும் தற்போது ரஞ்சிக் கோப்பையில் விளையாடத் தவறியதால் அவர்கள் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளதாக நம்பப்படுகிறது.

- Advertisement -

கங்குலி கருத்து:
இதைத் தொடர்ந்து பிசிசிஐ அறிவுரைப்படி தமிழ்நாட்டுக்கு எதிராக நடைபெறும் ரஞ்சிக் கோப்பை செமி ஃபைனலில் மும்பை அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுகிறார். ஆனால் கடைசி வரை ரஞ்சிக் கோப்பையில் விளையாடாத இசான் கிசான் மட்டும் ஐபிஎல் 2024 தொடரில் விளையாடுவதற்காக மும்பையில் நடைபெறும் டிஒய் பாட்டில் டி20 தொடரில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இஷான் கிசான் போன்ற திறமையான வீரரிடம் ஏன் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை என்பதை பற்றி பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் தேர்வுக் குழுவினர் பேச வேண்டும் என்று சௌரவ் கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரால் ரஞ்சிக் கோப்பையில் விளையாட முடிவதில்லை என்று யார் சொன்னாலும் அந்த காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவிக்கும் கங்குலி இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இஷான் கிசான் போன்ற வீரரிடம் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தலைவர் ரோஜர் பின்னி மற்றும் தேர்வுக் குழுவினர் பேச வேண்டும். ஏனெனில் ஏற்கனவே அவர் ரஞ்சிக் கோப்பை மற்றும் உள்ளூர் வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாடியுள்ளார். எனவே இப்போது விளையாடாததால் மட்டும் அவர் மோசமான வீரராக மாறி விட்டாரா என்று கேட்டால் கிடையாது. ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடும் இஷாந்த் சர்மா உள்ளிட்ட அனைத்து வீரர்களும் அனைத்து உள்ளூர் தொடர்களிலும் விளையாடுகின்றனர்”

இதையும் படிங்க: அரசியலா? கிரிக்கெட்டா? வாழ்க்கையில் முக்கிய முடிவை அறிவித்த கௌதம் கம்பீர்.. பின்னணி இதோ

“எனவே நமது வீரர்கள் டெஸ்ட் மற்றும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஒரே நேரத்தில் தாராளமாக விளையாடலாம். உள்ளூர் கிரிக்கெட்டுடன் உங்களுடைய ஐபிஎல் கேரியரையும் நீங்கள் தொடரலாம். ஏனெனில் உள்ளூர் போட்டிகள் ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு ஒரு மாதம் முன்பாகவே முடிந்து விடுகிறது. எனவே அதில் விளையாடுவதற்கு எந்த பிரச்சினையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்.

Advertisement