க்ருனால் பாண்டியாவை நீக்கிவிட்டு நிக்கோலஸ் பூரானுக்கு துணைக்கேப்டன் பதவி வழங்க – இதுதான் காரணமாம்

Pooran-and-Pandya
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசனானது மார்ச் மாதம் 22-ஆம் தேதி கோலாகலமாக துவங்க உள்ளது. இந்த தொடருக்கு இன்னும் சில வாரங்களே எஞ்சியிருக்கும் வேளையில் தற்போது அனைத்து ஐபிஎல் அணிகளும் இந்த தொடருக்காக மும்முரமாக தயாராகி வருகின்றன. அதேபோன்று இந்த தொடருக்கு முன்னதாக அனைத்து அணிகளை சேர்ந்த நிர்வாகங்களும் தங்களது அணியில் ஒரு சில குறிப்பிட்ட மாற்றங்களை செய்து அணியை பலப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் லக்னோ அணியும் அவர்களது துணை கேப்டனான க்ருனால் பாண்டியாவை பதவி நீக்கம் செய்து அவருக்கு பதிலாக புதிய துணை கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரரான நிக்கோலஸ் பூரானை நியமித்துள்ளது. இந்த மாற்றம் தற்போது அனைவரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

- Advertisement -

அதோடு இன்னும் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க சில வாரங்களே எஞ்சியுள்ள வேளையில் க்ருனால் பாண்டியாவின் நீக்கம் பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது. இந்நிலையில் அவற்றுக்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த வகையில் லக்னோ அணிக்காக கடந்த ஆண்டு கேப்டனாக செயல்பட்ட கே.எல் ராகுல் காயம் அடைந்தபோது துணை கேப்டனாக இருந்த க்ருனால் பாண்டியாவே தற்காலிக கேப்டனாக செயல்பட்டார். ஆனாலும் அவர் சர்வதேச கிரிக்கெட்டிலோ அல்லது ஐபிஎல் தொடரிலோ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்கிற ஒரு குறை அவர்மீது தொடர்ந்து வருகிறது.

- Advertisement -

அதேவேளையில் நிக்கோலஸ் பூரானை பொறுத்தவரை அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக ஏற்கனவே செயல்பட்டுள்ளார். அதுமட்டும் இன்றி உலகெங்கிலும் நடைபெற்று வரும் பல்வேறு டி20 லீக் போட்டிகளில் முக்கிய வீரராக விளையாடும் அவர் அண்மையில் நடைபெற்று முடிந்த பல தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளிலும் முக்கிய வீரராக இடம் பிடித்திருந்தார்.

இதையும் படிங்க : அரசியலா? கிரிக்கெட்டா? வாழ்க்கையில் முக்கிய முடிவை அறிவித்த கௌதம் கம்பீர்.. பின்னணி இதோ

இப்படி சர்வதேச அந்தஸ்து மற்றும் அனுபவத்தின் அடிப்படையிலேயே அவர் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹார்டிக் பாண்டியாவின் அந்தஸ்து தற்போது உயர்ந்துள்ள வேளையில் எப்படி ரோகித் சர்மாவை நீக்கி ஹார்டிக் பாண்டியாவை மும்பை அணி கேப்டன் பதவியில் நியமித்ததோ அதேபோன்றுதான் தற்போது க்ருனால் பாண்டியா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நட்சத்திர அந்தஸ்த்தில் இருக்கும் பூரான் லக்னோ அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement