அரசியலா? கிரிக்கெட்டா? வாழ்க்கையில் முக்கிய முடிவை அறிவித்த கௌதம் கம்பீர்.. பின்னணி இதோ

Gautam Gambhir 3
- Advertisement -

டெல்லியை சேர்ந்த நட்சத்திரம் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றிய பெருமைக்குரியவர். குறிப்பாக 2007 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் 75 ரன்கள் அடித்து பாகிஸ்தானை தோற்கடித்து தோனி தலைமையில் இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் 2011 உலகக் கோப்பை ஃபைனலில் இலங்கைக்கு எதிராக முக்கிய நேரத்தில் 97 ரன்கள் அடித்து 28 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

மேலும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக 2012, 2014 ஆகிய வருடங்களில் கோப்பையை வென்ற அவர் தோனி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு பின் 2வது வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் இந்திய அணியின் உலகக் கோப்பை நாயகனாக ரசிகர்களால் போற்றப்படும் அவர் ஓய்வுக்குப் பின் வர்ணனையாளராக செயல்பட்டு வந்தார்.

- Advertisement -

கம்பீர் அறிவிப்பு:
அதன் பின் அரசியல் ஈடுபட்ட அவர் பிஜேபி கட்சியில் இணைந்து 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அதில் தன்னுடைய சொந்த மாநிலமான கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு 6,95,109 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்ற அவர் தற்சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அதே சமயம் இந்திய அணி விளையாடும் போட்டிகளில் வர்ணனையாளராகவும் செயல்படும் அவர் ஐபிஎல் தொடரில் ஆலோசகராக லக்னோ அணியின் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக கௌதம் கம்பீர் இன்று திடீரென அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குறிப்பாக கிரிக்கெட்டில் உள்ள தம்முடைய வேலைகளில் கவனம் செலுத்த விரும்புவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கம்பீர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “கட்சியின் தலைவர் ஜேபி நட்டா அவர்காளிடம் என்னை கட்சி சம்பந்தமான வேலைகளிலிருந்து விடுவிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளேன்”

- Advertisement -

“அப்போது தான் என்னால் அடுத்து வரும் கிரிக்கெட் சம்பந்தமான வேலைகளில் கவனம் செலுத்த முடியும். மக்களுக்காக சேவை செய்வதற்கான வாய்ப்புக் கொடுத்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஜெய்ஹிந்த்” என்று கூறியுள்ளார். ஆனால் விரைவில் 2024 தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 6 இன்னிங்ஸ் 61 ரன்ஸ்.. ரஜத் பட்டிதாருக்கு நிபந்தனையோடு கடைசி வாய்ப்பை வழங்கவுள்ள இந்திய அணி – விவரம் இதோ

இருப்பினும் 2024 தேர்தலில் கம்பீருக்கு பிஜேபி கட்சி எந்த இடமும் கொடுக்கப் போவதில்லை என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. அதனாலயே தற்போது அந்த கட்சியிலிருந்து விலகி ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆலோசகர் பதவியில் முழு நேர கவனம் செலுத்துவதற்காக கம்பீர் இந்த முடிவை அறிவித்துள்ளார் என்று நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement