6 இன்னிங்ஸ் 61 ரன்ஸ்.. ரஜத் பட்டிதாருக்கு நிபந்தனையோடு கடைசி வாய்ப்பை வழங்கவுள்ள இந்திய அணி – விவரம் இதோ

Patidar
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தற்போது இந்திய அணியானது பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் தொடரினை ஏற்கனவே கைப்பற்றிய வேளையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டி மார்ச் 7-ஆம் தேதி துவங்கவுள்ளது.

இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணிக்காக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரஜத் பட்டிதார் அறிமுகமாகியிருந்தார். அப்படி தனக்கு கிடைத்த முதல் போட்டியில் முதல் இன்னிங்சில் 32 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 9 ரன்களை மட்டுமே அடித்து தடுமாறியிருந்தார்.

- Advertisement -

இருப்பினும் அவரது பேட்டிங் டெக்னிக் நன்றாக இருப்பதாக பலரும் கூறிய வேளையில் அவருக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் மூன்றாவது போட்டியிலும் முறையே 5 மற்றும் 0 என மோசமான ஆட்டத்தையே அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து நான்காவது டெஸ்ட்டிலும் 17 மற்றும் 0 என அடுத்தடுத்து சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக இந்த தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 6 இன்னிங்ஸ்களில் ஒருமுறை மட்டுமே 20 ரன்களை கடந்துள்ளார். அது தவிர்த்து இரண்டு முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

- Advertisement -

இப்படி 6 இன்னிங்ஸ்களில் விளையாடி 63 ரன்கள் மட்டுமே அடித்துள்ள இவரை கடைசி போட்டியில் இருந்து நீக்கி தேவ்தத் படிக்கல்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் ரஜத் பட்டிதார் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் ஐந்தாவது போட்டியில் விளையாட இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க : ஸ்ரேயாஸ், இஷான் கதை முடிந்ததா? மீண்டும் ஒப்பந்தத்தில் எப்படி நுழைய முடியும்? பிசிசிஐ விதிமுறை இதோ

மேலும் இதுகுறித்து ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் பரிசீலனை செய்த பிறகு அவருக்கு கடைசி வாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடைசி வாய்ப்பிலும் ஒருவேளை ரஜத் பட்டிதார் தன்னை நிரூபிக்க தவறும் பட்சத்தில் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவார் என்று தெரிகிறது. இதன் காரணமாக தனது கடைசி வாய்ப்பில் இக்கட்டான சூழலில் ரஜத் பட்டிதார் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement