ஸ்ரேயாஸ், இஷான் கதை முடிந்ததா? மீண்டும் ஒப்பந்தத்தில் எப்படி நுழைய முடியும்? பிசிசிஐ விதிமுறை இதோ

Ishan kishan and shreyas iyer 2
- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இசான் கிசான் ஆகிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிசிசிஐ வெளியிட்டுள்ள 2023 – 24 மத்திய சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்கள். தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் கேஎஸ் பரத் சுமாராக விளையாடினார். எனவே அவருக்கு பதிலாக இசான் கிசானை விக்கெட் கீப்பராக தேர்வு செய்ய இந்திய அணி நிர்வாகம் விரும்பியது.

அதற்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாடி தயாராக இருங்கள் என இசான் கிசானுக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவுரை வழங்கினார். ஆனால் அதை செய்யாத இஷான் கிசான் ஐபிஎல் 2024 தொடரில் விளையாடுவதற்கான வேளைகளில் ஈடுபட்டார். மறுபுறம் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் லேசான காயத்தை சந்தித்து வெளியேறிய ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு வாரத்திலேயே குணமடைந்ததால் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு என்சிஏ மற்றும் பிசிசிஐ அறிவுறுத்தியது.

- Advertisement -

கம்பேக் சாத்தியாமா:
ஆனால் அதைக் கேட்காத அவர் முதுகு வலி இருப்பதாக சொல்லி ரஞ்சிக் கோப்பை காலிறுதியில் மும்பை அணிக்காக விளையாடவில்லை. அதனால் தற்போது இசான் கிசான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மத்திய ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டுள்னர். இதனால் வருங்கால தொடர்களில் தேர்வு செய்ய அவர்களை தேர்வுக் குழுவினர் முன்னுரிமை கொடுக்க மாட்டார்கள். அதனால் அவர்களின் கேரியரும் இப்படியே முடிவதற்கு கூட வாய்ப்பிருக்கிறது.

இந்நிலையில் மத்திய ஒப்பந்தத்தில் மீண்டும் இஷான், ஸ்ரேயாஸ் இடம் பிடிக்க செய்ய வேண்டியதை பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “தேர்வுக் குழுவினர் உங்கள் திறமை மீது சந்தேகப்படவில்லை. என்சிஏ நீங்கள் ஃபிட்டாக இருப்பதாக சொல்கிறது. ஆனால் நீங்களோ இங்கிலாந்து தொடரில் விளையாடுவதற்கு தயாராக இல்லை என்று சொல்கிறீர்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி உங்களுக்கு பிசிசிஐ ஒப்பந்தத்தை கொடுக்க முடியும்”

- Advertisement -

“எனவே ஐபிஎல் தொடர் முடிந்ததும் போராடி இந்திய அணிக்காக மீண்டும் தேர்வாகி குறைந்தபட்ச போட்டிகளின் எண்ணிக்கையை தொட்டால் ப்ரோ-ராட்டா அடிப்படையில் அவர்களுக்கு பிசிசிஐ ஒப்பந்தத்தை வழங்கும்” என்று கூறினார். அதாவது ஸ்ரேயாஸ் மற்றும் இஷான் ஆகியோர் 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி அதன் பின் உள்ளூர் தொடரிலும் தேர்வுக் குழுவின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு அசத்த வேண்டும்.

இதையும் படிங்க: படிக்காத ஆள் மாதிரி பேசாதீங்க.. இந்தியாவுக்கு எதிராக ஹாக்-ஐ நிர்வாகியுடன் வம்பிழுக்கும் மைக்கேல் வாகன்

அதை செய்தால் மீண்டும் அவர்களை தேர்வுக் குழுவினர் இந்திய அணிக்காக தன்னிச்சையாக சொந்த அதிகாரத்தில் தேர்வு செய்வார்கள். அப்படி இந்தியாவுக்காக தேர்வாகி குறைந்தபட்சம் 3 டெஸ்ட் அல்லது 8 ஒருநாள் அல்லது 10 டி20 போட்டிகளில் விளையாடும் பட்சத்தில் ப்ரோ-ராட்டா விதிமுறை அடிப்படையில் மீண்டும் இஷான் கிசான், ஸ்ரேயாஸ் ஐயருக்கு பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தின் சி பிரிவில் இடம் கிடைக்கும். அதை செய்வதற்கான ப்ரோ-ராட்டா காலம் அக்டோபர் 1, 2023 முதல் செப்டம்பர் 30, 2024 என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement