படிக்காத ஆள் மாதிரி பேசாதீங்க.. இந்தியாவுக்கு எதிராக ஹாக்-ஐ நிர்வாகியுடன் வம்பிழுக்கும் மைக்கேல் வாகன்

Micheal Vaughan 9
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதி வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகள் முடிந்துள்ளது. அதில் 3 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா ஆரம்பத்திலேயே இங்கிலாந்தை தோற்கடித்து கோப்பையை வென்றுள்ளது. முன்னதாக இந்த தொடரில் ராஞ்சியில் நடந்த 4வது போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் எல்பிடபுள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டார்.

ஆனால் அதை டிஆர்எஸ் சோதனையில் ரிவ்யூ செய்த போது பந்து அவுட் சைட் லெக் ஸ்டம்ப் லைனுக்கு பாதிக்கும் மேல் வெளியே இருந்ததாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். குறிப்பாக லைனுக்கு பாதிக்கும் மேலே பந்து வெளியே இருந்தும் எப்படி அது ஸ்டம்பை அடித்திருக்கும் என்று கேள்வி எழுப்பிய அவர் அந்த தீர்ப்பில் ஒளிபரப்பு நிறுவனம் இந்தியாவுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக விமர்சித்தார்.

- Advertisement -

ஆதாரத்தை காட்டுங்க:
ஆனால் அதை டிஆர்எஸ் எல்பிடபுள்யூ சோதனையில் பந்து ஸ்டம்ப் மீது கற்பனையாக அடிக்கும் ஹாக்-ஐ டெக்னாலஜியை உருவாக்கிய பால் ஹாகின்ஸ் மறுத்தார். குறிப்பாக டிஆர்எஸ் ஹாக்-ஐ டெக்னாலஜி வேலை செய்யும் விதம் தெரியாமல் படிக்காத நபரை போல் பேசாதீர்கள் என மைக்கேல் வாகனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக பால் ஹாக்கின்ஸ் கொடுத்த பதிலடி பின்வருமாறு.

“அந்த வர்ணனை கொஞ்சம் படிக்காததை போல் இருந்தது என்று நினைக்கிறேன். வாகனிடம் இருந்து இது துரதிஷ்டவசமான கருத்தாகும். நல்ல வீரரான அவர் விளையாடுவதை நான் விரும்பி பார்த்துள்ளேன். வர்ணனையாளராகவும் அவர் பொழுது போக்கக் கூடியவர். ஆனால் பத்திரிகையாளராக உங்களுக்கு பொறுப்பு உள்ளது என்று நான் நினைக்கிறேன்”

- Advertisement -

“ஒரு பத்திரிக்கையாளராக இன்னும் தயார்படுத்திக் கொண்டு வேலை செய்வது கிரிக்கெட்டின் மிகப்பெரிய ரசிகர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை விளக்குவதற்கு அவருக்கு உதவியாக இருக்கும். ஹாக்-ஐ விதிமுறைப்படி அந்த தீர்ப்பில் சரியான பதில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஹாக்-ஐக்கு உண்மையாக இருக்க வேண்டிய கடமையைப் போலவே அவரைப் போன்ற பத்திரிக்கையாளர்களும் செய்ய வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 258 ரன்ஸ் 7 விக்கெட்.. ஃபாலோ ஆன் வாங்காமல் போராட்டம்.. வெற்றியை ருசிக்கப் போவது ஆஸியா? நியூஸிலாந்தா?

ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத மைக்கேல் வாகன் ஹாக்-ஐ எப்படி வேலை செய்கிறது என்ற அடிப்படைகளை ரசிகர்களுக்கு போட்டுக்காட்டுமாறு பால் ஹாக்கின்ஸ்க்கு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இது மிகவும் எளிது. எப்படி முடிவுகள் எடுக்கப்படுகிறது என்பதை காட்டுங்கள். இதில் வெளிப்படைத்தன்மையாக இருங்கள். உங்களுடைய செயல்பாடு எவ்வாறு செயல்படுகிறது என்பதை வீட்டில் உள்ள ரசிகர்களுக்கு சரியாக காட்டுங்கள். நான் கேட்டது அவ்வளவு தான். இந்தியாவுக்கு எதிரான அடுத்த டெஸ்டில் இதை ஒரு முழு ஓட்டத்தில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement