நெதர்லாந்து அணிக்கெதிரான போட்டியில் அணிக்கு திரும்பும் முக்கிய வீரர் – டீம் மீட்டிங்கில் பலே பிளான்

INDIA Dinesh Karthik Chahal Arshdeep Singh Harshal Patel Bhuvaneswar Kumar Rohit Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தங்களது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய இந்திய அணியானது நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து இந்திய அணி தங்களது இரண்டாவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியுடன் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளது.

VIrat Kohli IND vs PAK.jpeg

- Advertisement -

சிறிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இந்த போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் நாளைய போட்டியில் இந்திய அணியில் ஏதாவது மாற்றங்கள் இருக்குமா என்பதை அனைவரது கேள்வியாகவும் இருக்கிறது.

அந்த வகையில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதால் பெரிய அளவில் இந்த போட்டியில் மாற்றம் செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டாலும் அணியில் ஒரே ஒரு மாற்றமாக சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் மீண்டும் இந்திய அணியின் பிளேயிங் லெவனுக்குள் வருவார் என்று தெரிகிறது.

Chahal

ஏனெனில் தற்போதுள்ள இந்திய அணியில் பேட்டிங் வரிசை மிக பலமாக உள்ளதால் பேட்டிங் வரிசையில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது. அதே வேளையில் சமீப காலமாக சிறப்பாக பந்து வீசி வரும் விக்கெட் டேக்கர் யுஸ்வேந்திர சாஹலை அணிக்குள் கொண்டுவர டீம் மீட்டிங்கில் பேசப்பட்டதாக தெரிகிறது.

- Advertisement -

ஏனெனில் மெல்போர்ன் மைதானத்தை காட்டிலும் சிட்னி மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கை கொடுக்கும் என்பதனாலும் சாஹலுக்கு விளையாட போதிய வாய்ப்பினை தரவேண்டும் என்பதனாலும் அஸ்வின் அல்லது அக்சர் பட்டேல் ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக சாகல் விளையாடுவார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை : அதிவேகப்பந்தினை வீசி அசத்தல் சாதனையை நிகழ்த்திய – இங்கிலாந்து வீரர்

இந்த போட்டியில் வாய்ப்பினை பெரும் அவர் மீண்டும் விக்கெட் எடுக்காமல் போனால் அக்சர் மற்றும் அஸ்வின் ஆகியோரே தொடர்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement