டி20 உலககோப்பை : அதிவேகப்பந்தினை வீசி அசத்தல் சாதனையை நிகழ்த்திய – இங்கிலாந்து வீரர்

Mark-Wood
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது தகுதி சுற்றினை கடந்து தற்போது சூப்பர் 12 சுற்றில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முக்கியமான இன்றைய லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

IREvsENG

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய அயர்லாந்து அணியானது 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது 14.3 ஓவர்கள் இருக்கும் போது ஐந்து விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

அப்போது பெய்த மழையின் காரணமாக போட்டி பாதியிலேயே தடைப்பட்டது. பின்னர் நீண்ட நேரம் ஆகியும் போட்டி நடத்த முடியாமல் போன காரணத்தினால் டக் வொர்த் லூயிஸ் அடிப்படையில் அயர்லாந்து அணியானது ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதாக அம்பயர்கள் அறிவித்தனர்.

mark wood 1

இதன் மூலம் டி20 உலக கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இங்கிலாந்து அணியை டி20 போட்டியில் அயர்லாந்து அணி வீழ்த்தி சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மார்க் உட் இந்த டி20 உலக கோப்பை தொடரின் அதிவேக பந்தினை வீசி அசத்தலான சாதனையை இந்த தொடரில் பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இப்போவும் சொல்றேன் ரிட்டையர் ஆகிடுங்க விராட் கோலி – ஆலோசனை வழங்கிய பாக் வீரரை கலாய்க்கும் ரசிகர்கள்

அதன்படி இன்றைய போட்டியில் அசத்தலாக பந்து வீசியாக அவர் 154.1 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி அனைவரையும் வியக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தொடரில் இனி யாராலும் முறியடிக்கப்படாமல் இந்த பந்தே இந்த டி20 உலககோப்பை தொடரின் அதிவேகப்பந்தாக இருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement