6 மாசம் ஆச்சு.. எல்லா கெட்ட பழக்கத்தையும் விட்டுட்டேன்.. எதற்கு தெரியுமா? – யுஸ்வேந்திர சாஹல் அதிரடி

Yuzvendra Chahal
- Advertisement -

இந்திய அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 72 ஒருநாள் போட்டிகள் மற்றும் 80 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த அவர் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்தார். ஆனாலும் 2023 ஆம் ஆண்டிற்கு பிறகு அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

6 மாதமாக எல்லா கெட்ட பழக்கத்தையும் விட்டுட்டேன் : யுஸ்வேந்திர சாஹல்

தற்போது 35 வயதாகும் அவர் இனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பும் வாய்ப்பே இல்லை என்றும் பார்க்கப்பட்டு வருகிறது. அதே வேலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் அவர் 174 போட்டியில் விளையாடி 221 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

- Advertisement -

கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அவர் இந்த 2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக மினி ஏலத்தின் போது 18 கோடி ரூபாய் என்கிற மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக தற்போது பஞ்சாப் அணியுடன் இணைந்து பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக தான் மது அருந்தும் பழக்கத்தை விட்டு விட்டதாகவும் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்காக தான் தீவிரமாக தயாராக வருவதாகவும் சாஹல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த ஆண்டு நான் முதலில் எனது உடலை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன் காரணமாக ஆறு மாதங்களாக நான் குடிப்பதை நிறுத்தி விட்டேன்.

- Advertisement -

இதையும் படிங்க : 2026 ஐ.பி.எல் தொடருக்கான சி.எஸ்.கே அணியிலிருந்து விலகிய நட்சத்திர வீரர் – விவரம் இதோ

இப்போது என்னுடைய வயது 35. நான் சுறுசுறுப்பாக இருக்க விரும்புவதோடு அணிக்கு 150 சதவீதம் பங்களிப்பு வழங்க விரும்புகிறேன். ஒரு மூத்த பந்துவீச்சாளராக இளம் வீரர்களும் என்னிடம் இருந்து ஏதாவது கற்றுக்கொள்ள விரும்புவார்கள். எனவே நான் கெட்ட பழக்கத்தை விட்டு விட்டு போட்டிக்காக தயாராகி வருகிறேன் என சாஹல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement