2026 ஐ.பி.எல் தொடருக்கான சி.எஸ்.கே அணியிலிருந்து விலகிய நட்சத்திர வீரர் – விவரம் இதோ

CSK
- Advertisement -

நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது வரும் மார்ச் 28-ஆம் தேதி முதல் துவங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் எந்த அணி இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் ஷிப்பை கைப்பற்றப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சி.எஸ்.கே அணியிலிருந்து விலகிய நட்சத்திர வீரர் :

இந்த தொடரில் பங்கேற்க காத்திருக்கும் அனைத்து அணிகளும் தற்போது தங்களது சொந்த மைதானங்களில் தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி பத்தாவது இடத்தை பிடித்து வெளியேறிய சிஎஸ்கே அணி இம்முறை முன்கூட்டியே தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகிறது.

- Advertisement -

இந்த ஆண்டு மிகச்சிறப்பான கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் தயாராகி வரும் சென்னை அணி பல இளம் வீரர்களை மினி ஏலத்தில் தேர்வு செய்துள்ளதால் நிச்சயம் இந்த ஆண்டிற்கான பிளேயிங் லெவனில் வித்தியாசம் இருப்பதோடு மட்டுமின்றி அவர்களது விளையாட்டிலும் வித்தியாசம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக சிஎஸ்கே அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்படுத்தும் வகையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் வெளியான தகவல் யாதெனில் : சி.எஸ்.கே அணியில் இடம்பிடித்து விளையாடி வந்த ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான நாதன் எல்லிஸ் காயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் இந்த 2026 ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலுமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இப்படி வெளியான செய்தி அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : சஞ்சு சாம்சனின் பேட்டிங்கில் இவ்வளவு முன்னேற்றம் வர இதுவே காரணம் – ரிக்கி பாண்டிங் கருத்து

ஏனெனில் ஏற்கனவே சென்னை அணியில் இருந்து பதிரானா வெளியேற்றப்பட்ட வேளையில் அவரது இடத்தில் நாதன் எல்லிஸ் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இவரும் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதால் சிஎஸ்கே அணியின் பௌலிங் யூனிட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் இம்முறையும் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது கடினம் என்று சிலர் கூறி வருகின்றனர்.

Advertisement