சஞ்சு சாம்சனின் பேட்டிங்கில் இவ்வளவு முன்னேற்றம் வர இதுவே காரணம் – ரிக்கி பாண்டிங் கருத்து

Ponting and Samson
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர இளம் துவக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 5 ஆட்டங்களில் மட்டுமே விளையாடி இருந்தாலும் கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 321 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக சாதனையை நிகழ்த்தியதோடு மட்டுமின்றி இந்த டி20 உலக கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதினையும் வென்று அசத்தியிருந்தார்.

சஞ்சு சாம்சனின் பேட்டிங் மாற்றம் குறித்து பேசிய : ரிக்கி பாண்டிங்

இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவருக்கு உலககோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் அதற்கடுத்து முக்கியமான சூப்பர் 6 சுற்று ஆட்டங்களில் இருந்து அணியின் காம்பினேஷன் காரணமாக அவருக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

- Advertisement -

இதன் காரணமாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் பெரிய மாற்றம் வர காரணம் என்ன? என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ஒரு முன்னாள் கேப்டனாகவும், தற்போதைய பயிற்சியாளராகவும் சஞ்சு சாம்சனின் பேட்டிங் மாற்றம் குறித்து என்னால் சில விடயங்களை சரியாக சொல்ல முடியும்.

அந்த வகையில் ஒரு வீரர் முன்னேறி வர வேண்டுமெனில் அந்த அணியின் பயிற்சியாளர்கள் குழு மற்றும் கேப்டன் ஆகியோரின் நம்பிக்கை அந்த குறிப்பிட்ட வீரருக்கு கிடைக்க வேண்டும். அப்படி சஞ்சு சாம்சனுக்கு சரியான ஆதரவு பயிற்சியாளர் குழுவிடமிருந்தும், கேப்டனிடம் இருந்தும் கிடைத்திருக்கிறது. அதனால் தான் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : பும்ராவின் ஓய்வுக்கு பின்னர் நிச்சயம் இந்திய அணி இந்த சிக்கலை சந்திக்கும் – ரவிச்சந்திரன் அஷ்வின் எச்சரிக்கை

இந்திய அணிக்குள் என்ன பேசப்பட்டு வரும் என்பது எனக்கு தெரியாது? ஆனால் நிச்சயம் கேப்டன் மற்றும் கோச் ஆகியோரது ஆதரவு இல்லாமல் சஞ்சு சாம்சனின் பேட்டிங்கில் இவ்வளவு பெரிய மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை அவர்கள் கொடுத்த ஆதரவு சஞ்சு சாம்சன் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement