பும்ராவின் ஓய்வுக்கு பின்னர் நிச்சயம் இந்திய அணி இந்த சிக்கலை சந்திக்கும் – ரவிச்சந்திரன் அஷ்வின் எச்சரிக்கை

Ashwin and Bumrah
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது கடந்த சில ஆண்டுகளாகவே ஐசிசி தொடர்களில் தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. நடைபெற்று முடிந்த 2024 டி20 உலக கோப்பை, 2025 ஆசிய கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை தொடர் என பெரிய பெரிய தொடர்களை இந்திய அணி கைப்பற்றி வருகிறது. தற்போது இருக்கும் இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவதால் இன்னும் பல ஐ.சி.சி கோப்பைகளை எதிர்வரும் ஆண்டுகளில் வெல்லும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

பும்ராவுக்கு பிறகு இந்திய அணி சிக்கலை சந்திக்கும் : ரவிச்சந்திரன் அஷ்வின்

அந்த அளவிற்கு இந்திய அணி தற்போது பலம் வாய்ந்த அணியாக இருந்து வருகிறது. அதோடு தற்போதுள்ள இந்திய அணியை தாண்டி மேலும் இரண்டு, மூன்று அணிகளை உருவாக்கும் அளவிற்கு இந்திய அணியிடம் வீரர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள் என பல்வேறு முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த அளவிற்கு இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது.

- Advertisement -

ஆனால் தற்போதைய இந்திய அணியில் பேட்டிங் ஆர்டரை மட்டுமே பலமாக வைத்து இந்திய அணி கோப்பைகளை வென்று வருகிறது என்றும் பந்துவீச்சு துறையில் கொஞ்சம் முன்னேற்றம் காண வேண்டும் என்பதும் சிலரது கருத்தாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்ற பின்னர் இந்திய அணி பந்துவீச்சு துறையில் பெரிய சிக்கலை சந்திக்கும் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்திய அணி தற்போது பேட்டிங்கில் மிக பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. அதன்மூலம் அடுத்த பத்து ஆண்டுகளில் பல கோப்பைகளை இந்திய அணி வெல்லும். ஆனால் பந்து வீச்சின் நிலை அப்படி சிறப்பாக இல்லை. ஏனெனில் தற்போதைய நிலையில் பேட்டிங் செய்வது போல பந்துவீச்சு பார்ப்பதற்கு அவ்வளவு ஈர்ப்பாக இல்லை. சிக்ஸர்கள் அடிப்பதே ரசிகர்களை அதிகம் மகிழ்விக்கிறது. இதனால் எதிர்காலத்தில் குழந்தைகள் பந்துவீச்சை ஒரு விளையாட்டாக கூட தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : சஞ்சு சாம்சனுக்காக தோனி இதை செய்யவும் வாய்ப்பு இருக்கு – அணில் கும்ப்ளே கணிப்பு

பந்துவீச்சின் மூலம் தான் பெரிய தொடர்களையும், கோப்பைகளையும் வெல்ல முடியும் என்பதை யார் சிந்திப்பார்கள் என்று தெரியவில்லை. தற்போதைய இந்திய அணியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஓய்வு பெற்றால் அவரது இடத்தை நிரப்பப்போவது யார்? என்பது பெரிய கேள்வியாக உள்ளதாகவும் அவர் இல்லாமல் நிச்சயம் பந்துவீச்சு துறையில் இந்திய அணி பெரிய சிக்கலை சந்திப்போம் என்றும் அஸ்வின் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement