கடந்த 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட சஞ்சு சாம்சன் அந்த அணியின் நிர்வாகத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நடைபெற்று முடிந்த அந்த ஐபிஎல் தொடரோடு ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறுவதாக முடிவு செய்தார். அதனை தொடர்ந்து அவரை மினி ஏலத்திற்கு முன்னதாக வாங்க பல அணிகள் முயற்சி செய்தன. ஆனால் இறுதியில் சிஎஸ்கே அணி சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் தங்களது அணிக்குள் கொண்டு வந்தது.
தோனிக்காக சஞ்சு சாம்சன் இதையும் செய்வார் : அணில் கும்ப்ளே கணிப்பு
சென்னை அணியில் இடம்பெற்று விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோர் ராஜஸ்தான் அணிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து சஞ்சு சாம்சன் டிரேடிங் முறையில் சி.எஸ்.கே அணிக்கு வந்தார். ஏற்கனவே 44 வயதை எட்டியுள்ள தோனிக்கு இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் தொடர் கடைசி சீசனா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் சஞ்சு சாம்சனின் வருகை அவரது இடத்தினை பூர்த்தி செய்யும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தோனிக்கு அடுத்து சென்னை அணியின் புதிய முகமாக சஞ்சு சாம்சன் இருப்பார் என்றும் இன்னும் சில ஆண்டுகளில் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் இருந்து சஞ்சு சாம்சன் கைகளுக்கு கேப்டன் பதவி செல்லும் என்றும் பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அனிக்குள் வந்துள்ள சஞ்சு சாம்சனுக்காக தனது விக்கெட் கீப்பிங் பொறுப்பை கூட தோனி அவரிடம் வழங்க வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான அணில் கும்ப்ளே சில கணிப்புகளை வெளிப்படுத்தி உள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : கிரிக்கெட் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு மாறி வந்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே கவாஸ்கர், சச்சின், விராட் கோலி என மாறிவந்தது. கங்குலி, ராகுல் போன்றவர்களை கடந்து தோனி, விராட் கோலி ஆகியோர் வந்தார்கள். இப்படி படிப்படியான மாற்றங்களில் ஒன்றாக தற்போது சென்னை அணியில் தோனிக்கு அடுத்து சஞ்சு சாம்சன் வந்திருக்கிறார். என்னை பொறுத்தவரை தற்போதைக்கு ருதுராஜ் தொடர்ந்து கேப்டனாக நீடிப்பார் என்று நினைக்கிறேன்.
ஆனால் காலப்போக்கில் நிச்சயம் அவரது இடம் சஞ்சு சாம்சனுக்கு வரும். தற்போதைய நிலையில் சஞ்சு சாம்சன் துணை கேப்டனாக இருப்பார். அவருக்கு அந்த பதவி சரியான ஒன்றாக இருக்கும். தோனி சஞ்சு சாம்சனுக்காக விக்கெட் கீப்பராக செயல்படாமல் அவருக்கு விக்கெட் கீப்பிங் பணியை வழங்கினால் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன்.
இதையும் படிங்க : கம்பீரோட அந்த முடிவு என்னுடைய ஓய்விற்கு காரணமாக மாறியது.. ஆனாலும் அவரை நான் மதிக்கிறேன் – அஷ்வின் பேச்சு
ருதுராஜ் காயம் அடைந்து விளையாட முடியாமல் போகும் பட்சத்தில் சஞ்சு சாம்சன் தான் கேப்டனாக இருப்பார். மேலும் சஞ்சு சாம்சனுக்கு தமிழ் தெரியும் என்பதால் அணி நிர்வாகத்தினர் மத்தியில் மட்டும் இன்றி ரசிகர்களிடமும் மிகப்பெரிய பிணைப்பை அது உருவாக்கும் என அனில் கும்ப்ளே கூறியது குறிப்பிடத்தக்கது.



