ஐ.பி.எல் வராலற்றில் முதல் பந்து வீச்சாளராக யுஸ்வேந்திர சாஹல் நிகழ்த்தியுள்ள மாபெரும் சாதனை – விவரம் இதோ

Chahal
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 38-வது லீக் போட்டியானது இன்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்களையும், நேஹல் வதேரா 49 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 180 என்று அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ராஜஸ்தான் அணியானது விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ராஜஸ்தா அணியின் சார்பாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளையும், ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது ராஜஸ்தான் அணி சார்பாக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் நான்கு ஓவர்கள் பந்துவீசி 48 ரன்களை விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றி இருந்தார்.

- Advertisement -

அப்படி ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியிருந்தாலும் ஐபிஎல் போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளார். அந்த வகையில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமான யுஸ்வேந்திர சாஹல் இதுவரை 153 போட்டிகளில் விளையாடி 200 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இதையும் படிங்க : ஐபிஎல் அதிரடியை அதிகமா பாத்து புளிச்சு போச்சு.. ப்ளீஸ் இதை மாத்துங்க.. பிசிசிஐக்கு கவாஸ்கர் கோரிக்கை

இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரரான முகமது நபியை வீழ்த்திய அவர் ஐபிஎல் தொடரில் முதல் பவுலராக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement