ஐபிஎல் அதிரடியை அதிகமா பாத்து புளிச்சு போச்சு.. ப்ளீஸ் இதை மாத்துங்க.. பிசிசிஐக்கு கவாஸ்கர் கோரிக்கை

Sunil Gavaskar 2
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஐபிஎல் தொடரின் 2024 சீசன் மகிழ்வித்து வருகிறது. வரலாற்றில் 17வது முறையாக நடைபெறும் இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக 10 அணிகள் போட்டியிட்டு வருகின்றன. அதனால் வழக்கம் போல இந்த வருட ஐபிஎல் தொடரிலும் நிறைய போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்களுக்கு திரில்லர் விருந்து படைத்து வருகிறது என்று சொல்லலாம்.

இருப்பினும் ரசிகர்களை கவர்வதற்காக ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரர் போன்ற புதியடை விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும் பவுலர்களுக்கு எதிராகவும் அமைந்துள்ளது. அதை பயன்படுத்தி ஹைதராபாத் போன்ற அணிகள் 287 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்து வருகின்றன. அதன் காரணமாக பவுலர்கள் ஐபிஎல் தொடரில் கத்தி மேல் நடப்பது போன்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

- Advertisement -

கவாஸ்கர் கோரிக்கை:
எனவே பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைக்கும் சமநிலையை ஏற்படுத்த இம்பேக்ட் வீரர் விதிமுறை நீக்கப்பட வேண்டும் என்று ரோகித் சர்மா போன்ற சிலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களை கவர்வதற்காக எந்த விதிமுறையை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள் ஆனால் பவுண்டரி எல்லையின் அளவை மட்டும் அதிகரிக்குமாறு பிசிசிஐக்கு சுனில் கவாஸ்கர் கோரிக்கை வைத்துள்ளார்.

ஏனெனில் பவுண்டரி, சிக்சர்களை அதிகம் பார்ப்பது ஒரு கட்டத்தில் புளிப்பை ஏற்படுத்துவதாக கவாஸ்கர் கூறியுள்ளார். எனவே பவுண்டரி எல்லையை அதிகரிப்பது பவுலர்களுக்கும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பேட்டில் மாற்றம் செய்ய வேண்டும் என்று நான் பரிந்துரைக்க மாட்டேன். ஏனெனில் அவை அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டது”

- Advertisement -

“ஆனால் ஒவ்வொரு மைதானத்திலும் பவுண்டரி எல்லையை விரிவுப் படுத்துங்கள் என்று நான் நீண்ட காலமாக சொல்லி வருகிறேன். இன்றைய மைதானங்களை பாருங்கள். அதன் ஓரங்களில் சில மீட்டர்கள் போதுமான இடம் இருக்கிறது. எனவே அதை அதிகரித்தால் சிக்ஸர் மற்றும் கேட்ச் ஆகிய இரண்டுக்கும் வித்தியாசம் ஏற்படும். அதற்காக நீங்கள் எல்இடி விளம்பர பலகைகளை கொஞ்சம் பின்னே வைக்கலாம்”

இதையும் படிங்க: 20/3 என திணறிய மும்பை.. காப்பாற்றிய திலக் வர்மா.. ரெய்னாவை முந்தி சச்சினுக்கு பின் அபார சாதனை

“அப்போது தான் உங்களால் 2 – 3 மீட்டர்கள் பவுண்டரியை அதிகரிக்க முடியும். அது போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும். இல்லையெனில் பவுலர்கள் பாதிக்கப்படுவார்கள். இப்போதெல்லாம் பேட்ஸ்மேன்களிடம் அடித்து நொறுக்குங்கள் என்று பயிற்சியாளர்கள் சொல்வதைப் பார்க்க முடிகிறது. அது கொஞ்சம் சுவாரசியமாக இருந்தாலும் பின்னர் சுவாரசியத்தை கொடுக்கவில்லை” என்று கூறினார்.

Advertisement