20/3 என திணறிய மும்பை.. காப்பாற்றிய திலக் வர்மா.. ரெய்னாவை முந்தி சச்சினுக்கு பின் அபார சாதனை

RR vs MI
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 22ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் 38வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

அடுத்த ஓவரில் மறுபுறம் தடுமாறிய இசான் கிசானை டக் அவுட்டாக்கிய சந்தீப் சர்மா அதற்கடுத்ததாக வந்த உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவை 10 ரன்களில் காலி செய்தார். அதனால் 20/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய மும்பைக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த திலக் வர்மா மற்றும் முகமது நபி ஆகியோர் சரிவை சரி செய்யப் போராடினார்கள்.

- Advertisement -

அசத்திய சந்தீப்:
அதில் திலக் வர்மா அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் அதிரடி காட்ட முயற்சித்த முகமது நபியை 23 (17) ரன்களில் அவுட்டாக்கிய சஹால் ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரராக மாபெரும் சாதனை படைத்தார். இருப்பினும் அடுத்ததாக வந்த இளம் வீரர் நேஹல் வதேரா அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

அந்த வகையில் திலக் வர்மா மற்றும் நேஹால் வதேரா ஆகியோர் ஜோடி சேர்ந்து மிடில் ஓவர்களில் அட்டகாசமாக விளையாடி 5வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மும்பையை வலுப்படுத்தினர். இருப்பினும் அதில் 3 பவுண்டரி 4 சிக்ஸரை பறக்க விட்ட வதேரா அரை சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு 49 (24) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அப்போது வந்த ஹர்திக் பாண்டியா 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து அசத்திய திலக் வர்மா அரை சதமடித்து 5 பவுண்டரி 3 சிக்சருடன் 65 (45) ரன்கள் விளாசி அவுட்டானார். இதையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் அவர் 33 இன்னிங்ஸில் 1012 ரன்கள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1000 ரன்கள் அடித்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல் (இன்னிங்ஸ்):
1. சச்சின் டெண்டுல்கர்/ருதுராஜ் கைக்வாட் : தலா 31
2. திலக் வர்மா : 33*
3. சுரேஷ் ரெய்னா/யசஸ்வி ஜெய்ஸ்வால் : தலா 34

இதையும் படிங்க: நான் மோசமான பார்மில் இருந்தப்போ விராட் கோலி கொடுத்த அறிவுரைகள் தான் என்னை காப்பாற்றியது – ரியான் பராக் பேட்டி

இறுதியில் டிம் டேவிட் 3 ரன்களில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்ய தவறினார். அதனால் 20 ஓவரில் மும்பை 179/9 ரன்கள் எடுத்த நிலையில் ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சந்தீப் சர்மா 5, ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். குறிப்பாக நான்கு ஓவரில் 18 ரன்கள் மட்டும் கொடுத்து சந்திப் சர்மா 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

Advertisement