நான் மோசமான பார்மில் இருந்தப்போ விராட் கோலி கொடுத்த அறிவுரைகள் தான் என்னை காப்பாற்றியது – ரியான் பராக் பேட்டி

Parag
- Advertisement -

ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த இளம் வலதுகை அதிரடி ஆட்டக்காரரான ரியான் பராக் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 17-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறார். அதோடு இந்த தொடருக்கான ஆரஞ்சு கேப் போட்டியில் விராட் கோலிக்கு அடுத்து இரண்டாவது இடத்திலும் தொடர்ச்சியாக நீடித்து வருகிறார்.

கடந்த பல ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தாலும் தன்னுடைய மோசமான ஆட்டத்தாலும், குறைந்த அளவிலேயே ரன்களை குவித்து வந்ததாலும் பலராலும் விமர்சிக்கப்பட்டவர் தான் பராக். ஆனால் அவரது திறமையின் மீது நம்பிக்கை வைத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகம் அவரை தொடர்ச்சியாக அணியில் தக்க வைத்து நம்பிக்கை அளித்து வந்தது.

- Advertisement -

அதன் பயனாக இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டம் பிரமாதமாக இருந்து வருவதோடு சேர்த்து ராஜஸ்தான் அணியை புள்ளி பட்டியலில் முதலிடத்தில் கொண்டு சென்றுள்ளது. இந்த ஆண்டு நான்காவது வீரராக களம் இறங்கும் ரியான் பராக் அதிரடியில் அசத்தி வருகிறார்.

இந்நிலையில் இப்படி தான் கிரிக்கெட்டில் மேம்பட்டு உள்ளதற்கு காரணமானவர்கள் யார்? யார்? என்பது குறித்தும் அவர் சில தகவல்களை பகிர்ந்து உள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் கூறியதாவது : என்னுடைய ஐபிஎல் தொடரின் இரண்டாவது சீசனில் நான் சரியான நிலையில் இல்லை. என்னுடைய பார்ம் அப்போது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அப்போது நான் விராட் கோலி இடம் சென்று 10 முதல் 15 நிமிடங்கள் பேசுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

- Advertisement -

அவர் அவருடைய அனுபவத்தின் வாயிலாக கற்றுக் கொண்ட பல விடயங்களை எனக்கு அறிவுரையாக கூறியிருந்தார். அவரது அனுபவம் எனக்கு என்னுடைய பேட்டிங்கில் நிறையவே உதவி செய்திருக்கிறது என்று நினைக்கிறேன். அதே போன்று தோனி சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பராக இருந்தபோது நான் அந்த அணிக்கு எதிராக விளையாடிய உணர்வு அதிசயமானது. உண்மையிலேயே அப்போது நான் மிகவும் பதட்டமாக இருந்தாலும் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்தபடி விளையாடினேன்.

இதையும் படிங்க : தோனி மாதிரி ஸ்ரேயாஸ் பண்ணல.. ரூல்ஸை மாத்துங்க.. விராட் கோலி அவுட் பற்றி நவ்ஜோத் சித்து கருத்து

மேலும் ராகுல் டிராவிட் இடமிருந்தும் நான் நிறைய விடயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். அவர் 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கு பயிற்சியாளராக இருந்தபோது அவருடன் நான் நிறைய நேரங்களை செலவிட்டு உள்ளேன். அவர் ஒரு கிரிக்கெட் ஜாம்பவான் அவரைப் போன்ற ஒரு மாபெரும் வீரருக்கு நான் பயிற்சி பெற்றது மூலம் பல்வேறு விடயங்களை கற்றுக் கொண்டேன் என ரியான் பராக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement