தோனி மாதிரி ஸ்ரேயாஸ் பண்ணல.. ரூல்ஸை மாத்துங்க.. விராட் கோலி அவுட் பற்றி நவ்ஜோத் சித்து கருத்து

Navjot Sidhu
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற்ற 36வது லீக் போட்டியில் பெங்களூருவை வெறும் ஒரு ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தியது. இருப்பினும் ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் விராட் கோலி அவுட்டான விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது கொல்கத்தா வீரர் ஹர்ஷித் ராணா கிட்டத்தட்ட பீமர் போல லோ ஃபுல் டாஸ் பந்தை இடுப்புக்கு மேலே வீசினார்.

மறுபுறம் இடுப்புக்கு மேலே வருவதால் நோபால் கிடைக்கும் என்று கருதிய விராட் கோலி அதை அடிக்க முயற்சித்து பவுலரிடமே கேட்ச் கொடுத்தார். ஆனால் அதை அவுட்டென நடுவர்கள் அறிவித்ததால் ஏமாற்றமடைந்த விராட் கோலி ரிவ்யூ எடுத்தார். அப்போது வெள்ளைக்கோட்டுக்கு வெளியே வந்திருந்த விராட் கோலியின் இடுப்பை (1.04 மீட்டர்) விட சற்று குறைந்த உயரத்தில் (0.92 மீட்டர்) பந்து வந்ததாக ஸ்மார்ட் ரிப்ளை டெக்னாலஜி காண்பித்தது.

- Advertisement -

ரூல்ஸை மாத்துங்க:
எனவே விராட் கோலி மீண்டும் அவுட் என்று 3வது நடுவர் மைக்கேல் கௌ அறிவித்தார். அதனால் விராட் கோலி மிகுந்த ஏமாற்றத்துடன் பெவிலியின் திரும்பினார். இந்நிலையில் அப்போட்டியில் விராட் கோலி நாட் அவுட் என்று முன்னாள் இந்திய வீரர் நவ்ஜோத் சித்து கூறியுள்ளார்.

ஒருவேளை விராட் கோலி அவுட் என்றால் தவறாக உள்ள விதிமுறை மாற்றுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் 2011இல் இயன் பெல்லை ரன் அவுட் செய்தும் நேர்மைத்தன்மையுடன் மீண்டும் விளையாட அழைத்த தோனியை போல் கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நடந்து கொள்ளவில்லை என்று விமர்சிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“என்னுடைய நெஞ்சில் அடித்து அது அவுட்டில்லை என்று சொல்வேன். விதிமுறைகள் என்பது நாட்டின் நன்மைக்காக உருவாக்கப்பட வேண்டும். விராட் கோலி எங்கே நிற்கிறார் என்று பாருங்கள். பவுலர் பீமர் பந்தை வீசினால் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். பந்தின் லைனில் பேட் தொடர்பு கொள்ளும் இடம் கோட்டிலிருந்து 1.5 அடி உயரத்தில் இருக்கிறது. அந்த விதிமுறை மாற்றப்பட வேண்டும். ஏனெனில் அந்த தீர்ப்பு போட்டியின் மொத்த முடிவையும் மாற்றியது”

இதையும் படிங்க: ரசிகர்களின் கருத்துகளால் ஹார்டிக் பாண்டியா மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் – ராபின் உத்தப்பா ஓபன்டாக்

“இயன் பெல்லை மீண்டும் தோனி அழைத்ததை நான் பார்த்துள்ளேன். அப்போது பெல் 200 ரன்கள் அடித்தார். அதற்காக தோனி விருது பெற்றார். எனவே விராட் கோலிக்கு எதிராக பீமர் பந்தை வீசிவிட்டு அதை வரவேற்குமாறு என்னிடம் நீங்கள் கேட்டால் அதை எப்போதும் நான் செய்ய மாட்டேன். சந்தேகம் இருக்கும் போது அங்கே நீங்கள் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க வேண்டும். விளையாட்டின் நன்மைக்காக இது போன்ற விதிமுறைகள் மாற்றப்பட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement