முதல் பாதியின் போது சந்தோஷமா இருந்தேன் ஆனா.. சி.எஸ்.கே அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – சாம் கரண் வருத்தம்

Curran
- Advertisement -

தரம்சாலா நகரில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53-வது லீக் போட்டியில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது :

20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை மட்டுமே குவித்தது. சென்னை அணி சார்பாக ரவீந்திர ஜடேஜா 43 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்களையும் குவித்தனர். பஞ்சாப் அணி சார்பாக ராகுல் சாஹர் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

- Advertisement -

பின்னர் 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே குவித்ததால் 28 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக ராகுல் சாஹர் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் அற்புதமாக பந்துவீசி மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தனர்.

- Advertisement -

முதல் பாதியின் போது உண்மையிலேயே எங்களது ஆட்டத்தை நினைத்து எங்களுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆனால் இறுதியில் அது எங்களுக்கு பத்தாமல் போனது. இந்த மைதானத்தில் இரண்டாவது பாதியின் போது ரன் குவிக்க மிகவும் கடினமாக இருந்தது. நாங்கள் நினைத்ததை விட சற்று வேகமும் கூடுதலாக இருந்தது.

இதையும் படிங்க : இதுக்கு பேட்டிங் வராமல் பெஞ்சிலேயே உட்காருங்க.. சிஎஸ்கே அவரை எடுக்கட்டும்.. தோனியை விமர்சித்த ஹர்பஜன்

இந்த போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்தது உண்மையிலேயே மிகவும் வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் அடுத்ததாக ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டிக்காக நாங்கள் தயாராக வேண்டியுள்ளதால் நிச்சயம் இந்த தோல்வியை மறந்து வெற்றியை நோக்கி முன்னேறுவோம் என சான் கரண் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement