லக்னோ அணியை அவர்களது இடத்திலேயே வச்சி செய்ஞ்சு நாங்கள் பெற்ற வெற்றிக்கு காரணம் இதுதான் – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

Shreyas
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 54-ஆவது லீக் போட்டியானது நேற்று லக்னோ நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக சுனில் நரேன் 81 ரன்களையும், பிலிப் சால்ட் மற்றும் ரகுவன்ஷி ஆகியோர் தலா 32 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது கொல்கத்தா அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 16.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக கொல்கத்தா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை ருசித்தது.

இந்த போட்டியில் லக்னோ அணி சார்பாக ஸ்டாய்னிஸ் 36 ரன்களையும், கே.எல் ராகுல் 25 ரன்களையும் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : கடந்த ஆறு போட்டிகளாக எங்களுடைய டிரெஸ்ஸிங் ரூமில் நல்ல சூழல் நிலவி வருகிறது.

- Advertisement -

அணியில் உள்ள அனைத்து வீரர்களுமே மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். நாங்கள் டாசில் தோற்றாலும் போட்டியில் வெற்றி பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பவர்பிளே ஓவர்களில் நல்ல துவக்கம் கிடைப்பதனால் பெரிய ஸ்கோருக்கு செல்ல முடிகிறது. சுனில் நரேன் 200 ரன்கள் வரை வந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். அந்த வகையில் இந்த போட்டியில் எங்கள் அணி 200 ரன்களை கடந்ததில் மகிழ்ச்சி.

இதையும் படிங்க : முதல் பாதியின் போது சந்தோஷமா இருந்தேன் ஆனா.. சி.எஸ்.கே அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – சாம் கரண் வருத்தம்

அதேபோன்று லக்னோ அணிக்கு எதிராக எங்களது பந்துவீச்சாளர்கள் சரியான திட்டத்துடன் மிகச் சிறப்பாக பந்துவீசினர். நான் வீரர்களுக்கு முழு சுதந்திரம் கொடுப்பதால் அவர்களால் மிகச் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்த முடிகிறது. இதே பாசிட்டிவான இன்டென்டுடன் இந்த தொடரில் இனி வரும் போட்டிகளிலும் தொடர்ச்சியான வெற்றிகளை பெறுவோம் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement