ரசிகர்களின் கருத்துகளால் ஹார்டிக் பாண்டியா மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் – ராபின் உத்தப்பா ஓபன்டாக்

Uthappa
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இன்றுடன் வெற்றிகரமாக ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ளது. இந்த தொடரில் இதுவரை பாதி ஆட்டங்கள் நடைபெற்றுள்ள வேளையில் இந்த தொடரில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது 7 போட்டிகளில் 3 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகள் என 6 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஏழாம் இடத்தை பிடித்துள்ளது.

வழக்கமாகவே ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் சற்று பொறுமையாக ஆரம்பித்து பின்னர் இறுதிப்போட்டிய வரை செல்லும் மும்பை அணி இம்முறையும் துவக்கத்தில் சரியாக ஆடவில்லை என்றாலும் தற்போது கடந்த சில போட்டிங்களாவே வெற்றிகளை குவித்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஹார்டிக் பாண்டியாவின் மீது ரசிகர்கள் ஒவ்வொரு போட்டியிலும் கேலி, கிண்டல்கள் செய்வதை அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக பாண்டியா இந்தியாவின் எந்த மைதானத்தில் சென்று விளையாடினாலும் அவருக்கு எதிராக ரசிகர்கள் மைதானத்திலேயே கோஷத்தை எழுப்பி வருகின்றனர்.

இவ்வேளையில் கடந்த 12 ஆண்டுகளாக ராஜஸ்தான் மண்ணில் மும்பை அணி அவர்களை வீழ்த்தாத நிலைமையில் இன்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி விளையாட இருக்கிறது. இந்நிலையில் ரசிகர்கள் தெரிவித்து வரும் கருத்துக்களால் ஹர்திக் பாண்டியா மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : என்னை பொருத்தவரை ஹார்திக் பாண்டியா தவறாக புரிந்து கொள்ளப்பட்ட நல்ல வீரர். எந்த அணிக்காக அவர் விளையாடினாலும் உயிரைக் கொடுத்து விளையாடக் கூடியவர். அவரின் கிரிக்கெட் எதிர்காலம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது கூட அவருக்கு நன்றாக தெரியும். தற்போது ரசிகர்கள் அவரை கிண்டல் செய்வது அவரை மனதளவில் பாதித்துள்ளது.

இதையும் படிங்க : அம்பயரையே எதிர்க்குறீங்களா.. விராட் கோலிக்கு பிசிசிஐ வழங்கிய அதிரடி தண்டனை.. விவரம் இதோ

எந்த ஒரு மனிதரையும் இது போன்ற சம்பவங்கள் பாதிக்கும். தற்போது மனரீதியான பிரச்சனையை பாண்டியா சந்தித்துள்ளார். ரசிகர்களின் எமோஷனை என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒரு தனிப்பட்ட வீரரின் மீது இவ்வளவு வெறுப்பை வெளிப்படுத்தக் கூடாது என பாண்டியாவிற்கு ஆதரவாக உத்தப்பா பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement