அம்பயரையே எதிர்க்குறீங்களா.. விராட் கோலிக்கு பிசிசிஐ வழங்கிய அதிரடி தண்டனை.. விவரம் இதோ

Virat Kohli Umpires
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 7 தோல்விகளை பதிவு செய்துள்ளது. குறிப்பாக கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பெங்களூரு 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதை விட அந்தப் போட்டியில் விராட் கோலி அவுட் கொடுக்கப்பட்ட விதம் பெரிய சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

அதாவது அந்தப் போட்டியில் ஹர்ஷித் ராணா வீசிய லோ ஃபுல் டாஸ் பந்து இடுப்புக்கு மேலே வந்ததால் கண்டிப்பாக நோபால் கிடைக்கும் என்று கருதிய விராட் கோலி பவுண்டரி அடிக்க முயற்சித்தார். இருப்பினும் பந்து மேலே வந்ததால் அதை சரியாக அடிக்கத் தவறிய அவர் பவுலரிடமே கேட்ச் கொடுத்தார். அப்போது களத்தில் இருந்த நடுவர்கள் விராட் கோலி அவுட் என்று அறிவித்தனர்.

- Advertisement -

விராட் கோலிக்கு தண்டனை:
அதனால் அதிருப்தியடைந்த விராட் கோலி களத்தில் இருந்த நடுவர்களுடன் வாக்குவாதம் செய்து ரிவியூ கேட்டார். அதை 3வது நடுவர் சோதித்த போது வெள்ளைக்கோட்டை விட்டு வெளியே வந்திருந்த விராட் கோலியின் இடுப்பை (1.04 மீட்டர்) விட பந்து சற்று குறைந்த உயரத்தில் (0.92 மீட்டர்) வந்தது ஸ்மார்ட் ரிப்ளை டெக்னாலஜியில் தெரிந்தது. எனவே விராட் கோலி அவுட் என்று மீண்டும் 3வது நடுவர் மைக்கேல் கௌ அறிவித்தார்.

அதன் காரணமாக மீண்டும் ஏமாற்றமடைந்த விராட் கோலி களத்திலிருந்து நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். ஆனால் கடைசி வரை சாதகமான தீர்ப்பு கிடைக்காததால் விராட் கோலி அங்கிருந்து ஏமாற்றத்துடன் சென்றார். இருப்பினும் அந்த சமயத்தில் டெக்னாலஜியை தாண்டி வெறும் கண்ணால் பார்க்கும் போது பந்து இடுப்புக்கு மேலே வருவது நன்றாக தெரிவதாக பல ரசிகர்களும் சில முன்னாள் வீரர்களும் தெரிவித்தனர்.

- Advertisement -

எனவே அது அவுட் கிடையாது என்று ஆர்சிபி ரசிகர்கள் இப்போதும் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். மேலும் விராட் கோலிக்கு எதிராக வழங்கப்பட்ட அந்த தீர்ப்பு பெங்களூரு அணியின் 1 ரன் தோல்விக்கு காரணமாக அமைந்ததாகவும் ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொல்கத்தா போட்டியில் எண் 2.8 விதிமுறையை மீறி நடுவர்கள் வழங்கிய மீது விராட் கோலி அதிருப்தியையும் எதிர்ப்பையும் தெரிவித்ததாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: பால்கனி அறை கேட்டது உண்மைதானா? 2020-சீசனில் நடந்தது என்ன? உண்மையை கூறிய – சுரேஷ் ரெய்னா

எனவே அந்தப் போட்டியின் சம்பளத்திலிருந்து 50% விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதை விராட் கோலி ஏற்றுக் கொண்டதால் மேற்கொண்டு எந்த விசாரணையும் நடத்தப்படாது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஆர்சிபி ரசிகர்களிடம் மேலும் கோபத்தை ஏற்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

Advertisement