பால்கனி அறை கேட்டது உண்மைதானா? 2020-சீசனில் நடந்தது என்ன? உண்மையை கூறிய – சுரேஷ் ரெய்னா

Suresh-Raina
- Advertisement -

கடந்த 2020-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது முற்றிலுமாக நடைபெற்றது. உலகெங்கிலும் பரவி வந்த கொரோனா பரவலின் காரணமாக 2020-ஆம் ஆண்டு முற்றிலுமாக பலத்த பாதுகாப்புக்கு இடையே நடத்தப்பட்ட அந்த தொடரில் பல்வேறு விதிமுறைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டன. அந்த வகையில் அந்த தொடரில் பங்கேற்ற அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் முன்கூட்டியே ஐக்கிய அரபு அமீரகம் பயணித்து 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதன் பின்னரே அணி வீரர்களுடன் ஒன்று சேர்க்கப்பட்டனர்.

அதோடு அந்த தொடரில் பங்கேற்ற அனைவருமே கடுமையான கட்டுக்கோப்புகளுக்கு இடையே அந்த தொடரில் விளையாடி இருந்தனர். அந்த வகையில் சிஎஸ்கே அணிக்காக அப்போது விளையாடி வந்த சுரேஷ் ரெய்னாவும் 15 நாட்களுக்கு முன்னதாகவே துபாய் சென்றடைந்து அங்கு சிஎஸ்கே வீரர்கள் தங்கியிருந்தார்.

- Advertisement -

அப்படி 15 நாட்கள் அணி வீரர்களுடன் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்ட அவர் அந்த தொடர் ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக துபாயில் இருந்து நாடு திரும்பினார். அதன் பின்னர் சுரேஷ் மீண்டும் அந்த தொடருக்கு திரும்பவில்லை. அதற்கு காரணம் சுரேஷ் ரெய்னாவிற்கு பால்கனி அறை கொடுக்காதது தான் காரணம் என்று அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது.

அதன் பின்னர் 2022-ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி அவரை அணியிலிருந்தும் கழட்டி விட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது அந்த பால்கனி அறை சர்ச்சையை குறித்த உண்மை கருத்தினை சுரேஷ் ரெய்னா பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : 2020-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது எனது உறவினர்கள் சிலர் பதான்கோட்டில் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

- Advertisement -

எங்களது உறவினர்களின் மொத்த குடும்பமும் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டு என்னுடைய தந்தை மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் சோகத்தில் இருந்தனர். எனவே அந்த அழுத்தமான வேளையில் எனது குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் நாடு திரும்பினேன். அதோடு இந்த முடிவு குறித்து தோனி மற்றும் சிஎஸ்கே நிர்வாகத்திடம் கூறிய பின்னரே நான் அங்கிருந்து கிளம்பினேன்.

இதையும் படிங்க : தோனியின் வழி வேலைக்காகாது.. எனக்கு அதுல நம்பிக்கையும் இல்ல.. கொல்கத்தா கோச் கம்பீர் கருத்து

அதன்பின்னர் மீண்டும் அணியில் இணைய வேண்டும் எனில் 30 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதனால் நான் சிஎஸ்கே அணியில் இணையவில்லை ஆனால் அதன் பிறகு 2021-ல் நான் மீண்டும் சிஎஸ்கே அணியில் இடம் பிடித்து விளையாடி கோப்பையையும் வென்றிருந்தேன். அதனால் பால்கனி அறை கேட்டு எந்த ஒரு நிபந்தனையும் செய்யவில்லை என்பதை தெளிவாக ரெய்னா விளக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement