தோனியின் வழி வேலைக்காகாது.. எனக்கு அதுல நம்பிக்கையும் இல்ல.. கொல்கத்தா கோச் கம்பீர் கருத்து

MS dhoni and gautam gambhir
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி ஆகிய 3 ஐசிசி கோப்பைகளை வென்ற பெருமைக்குரியவர். அதனால் உலகிலேயே 3 விதமான ஐசிசி வெள்ளைப் பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்த அவரது தலைமையில் 2010ஆம் ஆண்டு இந்தியா உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாகவும் முன்னேறியது.

அத்துடன் சிஎஸ்கே அணிக்காக தோனி 5 ஐபிஎல் கோப்பைகளையும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கேப்டனாக வென்றுள்ளார். அந்த வகையில் இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக அளவில் தோனி மகத்தான கேப்டனாக போற்றப்படுகிறார். அப்படிப்பட்ட மகத்தான தோனி எப்போதும் வெற்றியை விட செயல் முறை தான் முக்கியம் என்று அடிக்கடி சொல்வார்.

- Advertisement -

நம்பிக்கை இல்ல:
குறிப்பாக “வெற்றி முடிவை விட செயல்முறை தான் முக்கியம். ஒருவேளை நீங்கள் செயல் முறையில் அக்கறை செலுத்தினால் உங்களைத் தேடி வெற்றி முடிவுகள் தாமாக வரும்” என்பது எம்எஸ் தோனியின் தாரக மந்திரமாகும். இந்நிலையில் தம்மைப் பொறுத்த வரை செயல்முறையை சரியாக செய்தால் முடிவு கிடைக்கும் என்ற தாரக மந்திரத்தில் நம்பிக்கை இல்லை என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

எனவே தோனியின் வழியில் தமக்கு நம்பிக்கை இல்லை என்று மறைமுகமாக தெரிவிக்கும் அவர் தம்மைப் பொறுத்த வரை வெற்றி மட்டுமே முக்கியம் எனக் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “எனக்கு வெற்றி முடிவுகள் தான் முக்கியம் என்று நான் வெளிப்படையாக சொல்வேன். “செயல்முறை” என்ற வார்த்தையில் எனக்கு நம்பிக்கை இல்லை”

- Advertisement -

“குறிப்பாக செயல் முறையை சரியாக செய்தால் முடிவு தாமாக வரும் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. என்னைப் பொறுத்த வரை முடிவுகள் தான் முக்கியம். ஏனெனில் மக்களும் ரசிகர்களும் இங்கே கொல்கத்தா அணி வெற்றி பெறுவதையே பார்க்க விரும்புகின்றனர். ஒட்டுமொத்த இந்தியாவில் கொல்கத்தா ரசிகர்கள் தான் மிகவும் விஸ்வாசமானவர்கள் என்பதை என்னுடைய இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து உணர்கிறேன்”

இதையும் படிங்க: ஆர்சிபி கேப்டனுக்கு அபராதம்.. அம்பயரை எதிர்த்த சாம் கரணுக்கும் தண்டனை.. காரணம் என்ன?

“ஏனெனில் முதல் 3 வருடங்களில் கொல்கத்தா அணி சுமாராக விளையாடியும் அவர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் ஆதரவு கொடுத்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள்” என்று கூறினார். முன்னதாக 2012, 2014 ஐபிஎல் கோப்பைகளை கேப்டனாக வென்ற கௌதம் கம்பீர் 20224 சீசனில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். அவருடைய வழிகாட்டுதலில் முதல் 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ள கொல்கத்தா புள்ளிப்பட்டியல் 2வது இடத்தில் அசத்தி வருகிறது.

Advertisement