ஆர்சிபி கேப்டனுக்கு அபராதம்.. அம்பயரை எதிர்த்த சாம் கரணுக்கும் தண்டனை.. காரணம் என்ன?

Sam Curran Faf
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் ஐபிஎல் 2024 தொடரில் ஏப்ரல் 21ஆம் தேதி 2 போட்டிகள் நடைபெற்றது. அதில் மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 36வது லீக் போட்டியில் பெங்களூரு அணியை வெறும் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து கொல்கத்தா வென்றது. அப்போட்டியில் 223 ரன்களை சேசிங் செய்த பெங்களூரு 221 ரன்கள் எடுத்து போராடி பரிதாபமாக தோற்றது.

அதனால் 8 போட்டிகளில் 7வது தோல்வியை பதிவு செய்த பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து கடைசி இடத்தில் திணறுகிறது. அதன் காரணமாக அடுத்த 6 போட்டியில் வெற்றி பெற்றாலும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது. எனவே முதல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆர்சிபி ரசிகர்களின் கனவு நிஜமாவது மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

- Advertisement -

கேப்டன்களுக்கு அபராதம்:
அதே போல இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 37வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த குஜராத் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறியது. அந்தப் போட்டியில் வெறும் 142 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை சந்தித்த பஞ்சாப் 6வது தோல்வியை பதிவு செய்துள்ளது. அதனால் 9வது இடத்தில் தவிக்கும் அந்த அணியின் பிளே ஆஃப் சுற்றும் வாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் 36வது லீக் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பெங்களூரு அணி பந்து வீசி முடிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. அதனால் அந்த அணியின் கேப்டன் பஃப் டு பிளேஸிஸ்க்கு அப்போட்டிக்கான சம்பளத்திலிருந்து 12 லட்சம் அபராதமாக விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த சீசனில் முதல் முறையாக பெங்களூரு அணி இந்த தவறை செய்துள்ளது.

- Advertisement -

எனவே முதல் தவறு என்பதால் பெங்களூரு அணியின் கேப்டனுக்கு மட்டும் அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது. அதை விட குஜராத்துக்கு எதிரான போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய பஞ்சாப் கேப்டன் சாம் கரண் 20 ரன்கள் எடுத்திருந்த போது ரசித் கானுக்கு எதிராக எல்பிடபிள்யூ டபிள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டார்.

இதையும் படிங்க: அவ்வளவு அடியையும் வாங்கிக்கொண்டு.. உலகின் வள்ளல் பரம்பரை டி20 அணியாக.. ஆர்சிபி மோசமான உலக சாதனை

ஆனால் நடுவர் வழங்கிய அந்த தீர்ப்பு மீது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர் எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டே பெவிலியன் திரும்பினார். எனவே 2.8 விதிமுறையை மீறி நடுவர் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இப்போட்டியின் சம்பளத்திலிருந்து சாம் கரணுக்கு 50% அபராதம் விதிக்கப்படுவதாகவும் ஐபிஎல் நிர்வாக அதிரடியாக அறிவித்துள்ளது.

Advertisement