ரசிகர்களுக்காக கஷ்டப்படுறோம்.. இம்பேக்ட் ரூல் இருக்கட்டும்.. ப்ளீஸ் இதை மட்டும் மாத்துங்க.. அஸ்வின் கோரிக்கை

R Ashwin
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 2024 சீசன் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. வரலாற்றில் 17வது முறையாக நடைபெறும் இந்த தொடரில் வழக்கத்திற்கு மாறாக பவுலர்களுக்கு கருணை காட்டாமல் பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கி வருகிறார்கள் என்றே சொல்லலாம். குறிப்பாக ஹைதராபாத் அணி ஒரே வருடத்தில் 3 முறை 250க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தது.

மேலும் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் அடித்த அந்த அணி டெல்லிக்கு எதிராக 5 ஓவரில் 100 ரன்கள் நொறுக்கியது. அதனால் பிரீமியர் லீக் டி20 போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி மற்றும் வேகமாக 100 ரன்கள் குவித்த அணி ஆகிய இரண்டு சாதனைகளையும் ஹைதராபாத் படைத்தது. அந்த வகையில் இந்த தொடரில் பவுலர்களை விட பேட்ஸ்மேன்களின் கை அதிகமாக ஓங்கி இருக்கிறது.

- Advertisement -

அஸ்வின் கோரிக்கை:
அதற்கு இம்பேக்ட் வீரர் விதிமுறை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்த விதிமுறையை பயன்படுத்தி அனைத்து அணிகளும் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன்களுடன் களமிறங்குகின்றன. இந்நிலையில் இம்பேக்ட் வீரர் விதிமுறையை விட கிரிக்கெட் மைதானங்களில் பவுண்டரி அளவு மிகவும் சிறியதாக இருப்பதே பவுலர்கள் அடி வாங்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

குறிப்பாக ரசிகர்களை கவர்வதற்காக அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட வேண்டும் என்பதற்காக பவுண்டரியின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். எனவே அதை கொஞ்சம் அதிகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அன்றைய காலத்தில் கட்டப்பட்ட மைதானங்கள் இன்றைய காலகட்டத்திற்கு பொருந்தாது. அப்போது பயன்படுத்தப்பட்ட பேட்டுகள் தெருவோர கிரிக்கெட்டுக்கும் பயன்படுத்தப்பட்டன”

- Advertisement -

“தற்போது ஸ்பான்சர்சிப் சம்பந்தமான எல்ஈடி பலகைகள் பயன்படுத்தப்படுவதால் மைதானத்தில் பவுண்டரி அளவு 10 யார்ட்கள் வரை குறைந்துள்ளது. எனவே அது ஒருபுறமாக சாய்ந்துள்ளது. அதில் அசத்துவதற்கு பவுலர்களுக்கு மன உத்வேகம் தேவை. இந்த விளையாட்டு சமநிலையை மாற்றுகிறது. அதற்கு நீங்கள் பதில்களை கண்டுபிடிக்க வேண்டும். உங்களை வேறுபடுத்திக்கொள்ள தெளிவான சாளரம் உள்ளது”

இதையும் படிங்க: உங்க ஆசைக்கு விலை கொடுத்துட்டான்.. மயங் யாதவ் காயத்துக்கு அவங்க தான் காரணம்.. பிரட் லீ அதிருப்தி

“ஐபிஎல் தொடரில் கொடுக்கப்படும் சராசரி ரன்ரேட்டை பார்த்தால் அது கொஞ்சம் அதிகரித்துள்ளது. ஜெய்ப்பூரில் நடந்த ஒரு போட்டியில் நாங்கள் 180 ரன்களை கட்டுப்படுத்தினோம். அது மிகவும் பெரியது. அங்கே நீங்கள் நிச்சயமாக பந்து வீசுவதில் ஆச்சரியப்படுகிறீர்கள். ஆனால் நாள் முடிவில் ரசிகர்கள் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை பார்ப்பதற்காக வருகின்றனர்” என்று கூறினார்.

Advertisement