அடப்பாவமே இதென்ன ஷிகர் தவானுக்கு ஏற்பட்ட நிலைமை.. சி.எஸ்.கே அணிக்கெதிரான போட்டியிலும் – ஏமாறப்போகும் ரசிகர்கள்

Dhawan
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இந்திய அணியின் சீனியர் வீரரான ஷிகர் தவான் செயல்பட்டு வந்தார். இந்த தொடரின் ஆரம்பகட்ட முதல் ஐந்து போட்டிகளில் விளையாடிய ஷிகர் தவான் அந்த ஐந்து போட்டிகளிலும் சேர்த்து 152 ரன்கள் மட்டுமே எடுத்து சுமாரான பார்மை வெளிப்படுத்திய இருந்த வேளையில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

அப்படி தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஐந்து போட்டிகளாக விளையாடாமல் டக் அவுட்டில் அமர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணியை உற்சாகப்படுத்தி வந்தார். அவருக்கு பதிலாக சாம் கரண் தற்காலிக கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

சாம் கரணின் தலைமையில் பஞ்சாப் அணியானது கடந்த 5 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது. அதோடு அவரது தலைமையில் அசாத்தியமான சில வெற்றிகளை பெற்றுள்ளது பஞ்சாப் அணிக்கு மீண்டும் ஒரு நம்பிக்கையையும் கொடுத்துள்ளது.

இதுவரை மொத்தமாக 10 போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியானது இறுதியாக நடைபெறவுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றிற்கான ஒரு வாய்ப்பு இருக்கும் என்பதனால் இந்த நான்கு போட்டிகளும் மிக முக்கியமான போட்டிகளாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த ஐந்து போட்டிகளாகவே காயம் காரணமாக விளையாடாமல் இருந்து வரும் ஷிகர் தவான் மீண்டும் தர்மசாலா நகரில் நடைபெற இருக்கும் சென்னை அணிக்கு எதிரான போட்டியின் போது அணிக்கு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தர்மசாலாவில் பயிற்சி நடைபெற்று வரும் வேளையில் பஞ்சாப் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான சுனில் ஜோஷி சென்னை அணிக்கெதிரான போட்டியிலும் தவான் பங்கேற்க மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ரசிகர்களுக்காக கஷ்டப்படுறோம்.. இம்பேக்ட் ரூல் இருக்கட்டும்.. ப்ளீஸ் இதை மட்டும் மாத்துங்க.. அஸ்வின் கோரிக்கை

அதன் காரணமாக ஏமாற்றத்தை சந்திக்கவுள்ள ரசிகர்கள் மீண்டும் தவான் விளையாடுவதை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இருப்பினும் சென்னை அணிக்கெதிரான போட்டியில் விளையாடவில்லை என்றாலும் அடுத்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் அவர் விளையாட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement